தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழும் கே எஸ் ரவிக்குமார் பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை. எனினும் எந்த பதிவில் கே எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் அளித்திருக்கும் எக்ஸ்க்ளூசிவான பேட்டி பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.
கே எஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ரவிக்குமார் யாரும் இது வரை யோசிக்காத வகையில் பெண்களுக்கான லைப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி இருக்கிறார். இதன் நோக்கம் பெண்களுடைய மனதின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துவது தான்.
3 வருஷமா குழந்தை இல்ல..
எவர் குரோத் அகாடமி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில் சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் எம்டி திருமதி மரியா ஜீனா ஜான்சன், நேச்சுரல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பி கே குமாரவேல், இந்தியாவின் லைவ் கோச்சிங் பயிற்சியாளர் பூஜா புனித் போன்றவர்கள் திறப்பு விழாவின் சமயத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் மல்லிகா தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட இவர் தனது தாயார் பற்றியும் பெருமையாக பேசி இருக்கிறார்.மேலும் ஆரம்ப காலத்தில் பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படித்தான் அவர் வீட்டிலும் இவர் வளர்ந்திருக்கிறார்.
எனவே வெளி உலக அனுபவம் இல்லாத இவர் தான் காதலில் விழுந்து விட்டதாகவும் காதல் செய்த நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன் தந்தையிடம் கூறியதை அடுத்து அவர் ஆறு மாத அவகாசத்தை கேட்டிருந்தார்.
அந்தப் பையன் எப்படி பட்டவர் என்பதை கண்டறியவும், அவரது பேக்ரவுண்ட்டை தெரிந்து கொள்ளவும் தான் என்பதை புரிந்து கொண்ட இவர் நானே நல்ல பையன் என்று சொல்லிவிட்டேன். இதை அடுத்து என்ன பேக்ரவுண்டை பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்ததாக சொன்னார்.
கல்யாணத்துக்கு பிறகு புருஷன் பற்றி தெரிஞ்சது..
இதனை அடுத்து பையன் வீட்டில் அனைவரும் மிக நல்லவர்கள் பாரம்பரியத்தோடு இருப்பவர்கள் என்று அறிந்ததை அடுத்து என்னை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு என் வீட்டாருக்கும் கணவர் வீட்டாருக்கும் மலைக்கு மழுவுக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடு இருந்தது.
இதில் குறிப்பாக பழக்கவழக்கங்கள் அதிகளவு மாறுபட்டதை எடுத்து ஆரம்ப காலத்தில் நான் திணறி விட்டேன். இந்நிலையில் என் கணவர் வீட்டில் விருந்தோம்பல் என்பதை கடைப்பிடித்து வந்ததோடு பரிமாறிய பின்பே பெண்கள் உணவை அருந்தி இருக்கிறார்கள்.
ஆனால் எங்கள் வீட்டில் அப்படி ஒரு பழக்கமே கிடையாது. அவர்கள் தேவைப்படும் போது அவர்களே உணவை எடுத்து உண்பார்கள். அவர்களது பழக்கத்தை நான் தவறு என்று சொல்லவில்லை என்றாலும் எனக்கு அந்த பழக்கம் புதிதாக தோன்றியது.
மேலும் திருமணம் செய்ததை அடுத்து எனக்கு மூன்று வருடங்களாக குழந்தை கிடைக்கவில்லை. மூன்று வருடங்களுக்கு பிறகு தான் நான் கர்ப்பம் தரித்தேன்.
அதனை அடுத்து எனது முதல் குழந்தையின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொண்ட என்னை பார்த்து சிலர் பைத்தியக்காரத்தனமாக செயல்படுகிறேன் என்று கூட பேசி இருக்கிறார்கள்.
கே எஸ் ரவிக்குமார் மகள் பகீர் பேச்சு..
எனினும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் லாக்டவுன் பீரியட் என்பதால் இந்த சமயத்தில் குழந்தையை எப்படி கண்ணும் கருத்துமாக வளர்ப்பது என்று எண்ணத்தில் இருந்தேன்.
மேலும் சில சமயங்களில் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அதிலிருந்து வெளி வர முடியாமல் தவித்த போது தான் உளவியல் ரீதியான பல விஷயங்களை கற்றுக் கொண்டதை அடுத்து பெண்களுக்கான இந்த நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
இதன் மூலம் பெண்கள் சிறப்பான ஆரோக்கியத்தை பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் இது சம்பந்தமான விழிப்புணர்வு தற்போது மக்களிடையே பேசி வருவதால் நாம் செய்வதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என கே எஸ் ரவிக்குமார் மகள் பேசியிருக்கிறார்.