பொதுவெளியில் என் குடும்பம் பற்றி பேச விரும்பவில்லை.. மோஸ்ட் வாண்டெட் டைரக்டர் லோகி பேச்சு..

தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள் இருக்கும் போது முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். கோவையை சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் வங்கி ஊழியராக பணிபுரிந்ததை அடுத்து சினிமாவில் கொண்டு இருந்த ஆவலால் குறும்படங்களை இயக்க ஆரம்பித்தார்.

மேலும் இவர் இயக்கிய குறும்படம் ஒன்று குறும்பட போட்டியில் போட்டியிட்டதை அடுத்து அந்த போட்டியின் நடுவராக கார்த்திக் சுப்புராஜ் இருந்ததை அடுத்து லோகேஷ் கனகராஜை அதிகளவு ஊக்கப்படுத்தியதை அடுத்து 2016-ஆம் ஆண்டு அவர் தயாரித்த அவியல் என்ற அந்தாலஜி படத்தில் களம் என்ற பகுதியை இயக்க கூடிய வாய்ப்பை பெற்றார்.

மோஸ்ட் வாண்டெட் டைரக்டர் லோகி பேச்சு..

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் 2017-ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த இந்த படம் ஹிட் படமாக இல்லை என்றாலும் ரசிகர்களின் மத்தியில் இவர் பேசப்படக்கூடிய வகையில் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து நடிகர் கார்த்தியோடு இணைந்து கைதி படத்தை இயக்கியதை அடுத்து என்ற திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை லோகிக்கு பெற்று தந்ததை அடுத்து அடுத்த பட வாய்ப்பு விரைவாக வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்க இந்த படமும் மாஸ் வெற்றியை கொடுத்து இவரை முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாற்றியதை அடுத்து கமலஹாசன் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி ஒரு மாபெரும் வெற்றியை பெற்று வசூலையும் சாதனை புரிந்த இவர் விக்ரம் படத்தின் மூலம் அனைவராலும் பேசப்படக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

பொதுவெளியில் என் குடும்பம் பற்றி பேச விரும்பவில்லை..

மேலும் இவர் மீண்டும் விஜயோடு கைகோர்த்து லியோ படத்தை இயக்க அந்த திரைப்படம் கலவை ரீதியான விமர்சனங்களை தந்ததை அடுத்து சுருதிஹாசனின் இனிமேல் என்ற ஆல்பம் மூலம் நடிகராக மாறினார்.

தற்போது கூலி என்ற படத்தை இயக்கி வரும் இவர் கைதி 2 விக்ரம் 2 ரோலக்ஸ் என அடுத்தடுத்த படங்களை இயக்க உள்ள நிலையில் இருக்கிறார். எனினும் தன் குடும்பம் பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இது வரை பொதுவெளியில் எதுவும் பேசியதில்லை.

அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் தற்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்த சில விஷயங்கள் இணையங்களில் வந்துள்ளது.

அந்த வகையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் ஆருத்ரா என்ற மகனும் ஆத்விகா என்ற மகளும் உள்ள நிலையில் இவரது மனைவியின் பெயர் ஐஸ்வர்யா என தெரியவந்துள்ளது.

எனினும் இவரது குடும்ப புகைப்படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் தனது குடும்பம் பற்றி பேசாததற்கு என்ன காரணம் என்று அவர் சொல்லும் போது சினிமாவிற்கு வந்த பிறகு தனக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்தால் போதும். என் குடும்பத்தை பற்றி பொது வெளியில் பேச விரும்பவில்லை பாராட்டு விமர்சனம் என எதுவாக இருந்தாலும் அது நமக்குள்ளே இருக்கட்டும் என்று கூறி இருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதை அட லோகேஷ் கனகராஜ் இப்படியா சொன்னார் என்ற எண்ண அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version