சீதா கூட 20 வருஷம் பேசல.. எல்லாமே என் தப்பு தான்.. நான் கால்ல விழ தயார்.. பார்த்திபன் எமோஷனல்..!

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பார்த்திபன். தன்னுடைய முதல் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு பிடித்தமான கதைகளாக தான் இருக்கும்.

பெரும் நடிகர்களுக்காக கதைகளை மாற்றக்கூடிய இயக்குனர் கிடையாது என்பதாலேயே பார்த்திபனுக்கு பெரிய நடிகர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தது கிடையாது. அவரே இதை நிறைய முறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

ரஜினியோ அல்லது விஜயோ என்னிடம் வந்து திரைப்படத்திற்கு சான்ஸ் கொடுத்தது கிடையாது என்று பார்த்திபன் நிறைய முறை கூறியிருக்கிறார். அதேபோல இப்போதுவரை தனக்கென சொந்த வீடு கூட இல்லை என்று தனது பேட்டியில் கூறுகிறார் பார்த்திபன்.

கஷ்டத்தில் இருக்கும் பார்த்திபன்:

ஒவ்வொரு திரைப்படம் முடித்த பிறகும் அதன் வெற்றியின் மூலமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது வரை அது நடக்கவில்லை என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.

பார்த்திபன் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்த போது நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

2004 ஆம் ஆண்டு சீதாவிற்கும் பார்த்திபனுக்கும் இடையே விவாகரத்து ஆனது. அதற்குப் பிறகு இப்போது வரை அவருடன் பேசவே இல்லை என்று கூறுகிறார் இயக்குனர் பார்த்திபன். தற்சமயம் இவரது இயக்கத்தில் டீன்ஸ் என்கிற திரைப்படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது.

பெரும் படத்துடன் போட்டி:

இந்தியன் 2 திரைப்படத்துடன் போட்டியிட்டு இந்த திரைப்படம் வர இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதமே வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்தார் பார்த்திபன்.

ஆனால் படத்தில் வி எஃப் எக்ஸ் வேலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள்தான் படம் தள்ளி போனதுக்கு காரணம் என்கிறார் பார்த்திபன் சிவ பிரசாத் என்கிற வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்ப கலைஞரிடம்தான் இந்த படத்திற்கான வேலைகள் கொடுக்கப்பட்டன.

ஆனால் அவர் எந்த ஒரு வேலையுமே ஒழுங்காக செய்து தரவில்லை. அதனை தொடர்ந்து அந்த வேலையை திரும்ப செய்து தரும்படி அவரிடம் கூறினோம் அவர் எங்கள் படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று இந்த வி.எஃப்.எக்ஸ் வேலையை சரியாக செய்யாததற்காக என்னை செருப்பால் கூட அடியுங்கள் நான் யார் காலிலும் விழகூட தயாராக இருக்கிறேன்.

மேலும் படம் தொடர்பாக ஏற்பட்ட 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடையும் நானே கொடுக்கிறேன் என்று கூறினார். ஆனால் அப்போதைய சமயத்தில் எங்களுக்கு திரும்ப வி.எஃப்.எக்ஸ் செய்வதற்கு ஆள் கிடைக்கவில்லை.

எனவே அவரை வைத்தே அந்த வேலையை செய்தோம் அவர் படம் வெளியாகும் தருணத்தில் சரியாக அவற்றை முடித்து கொடுக்கவில்லை பிறகுதான் இது குறித்து வழக்கு தொடர்ந்தோம் என்று பார்த்திபன் அந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version