இயக்குனர் அட்லீக்கு பகிரங்கமாக சவால் விட்ட பேரரசு..! இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கே..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி மிகப் பெரிய நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தில் இடம் பிடித்திருப்பவர் தான் இயக்குனர் அட்லீ.

இவர் பிரமாண்ட இயக்குனர் ஆன ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்தார்.

இயக்குனர் அட்லீ:

அதன் பின்னர் இயக்குனராக அறிமுகமானார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய திரைப்படங்களில் அட்லீ உதவி இயக்குனராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் .

இத்திரைப்படத்தில் ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்திருந்தார்கள். இவர்களுடன் ஜெய் மற்றும் நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர் .

இயக்கிய முதல் திரைப்படம்;

இந்த திரைப்படம் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்றதால் அட்லீக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியது .

முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து அட்லீ மாஸ்தான இயக்குனராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார் .

முன்னதாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முகப்புத்தகம் என்னும் குறும்படத்தை இயக்கி இருந்தார். ஒரு சில குறும்படங்களை இயக்கிய பின்னர் அவர் திரைப்படத்தை இயக்க துவங்கினார்.

தொடர் வெற்றி திரைப்படங்கள்;

அதன்படி விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி விஜய்யின் வெற்றி இயக்குனராக பார்க்கப்பட்டார் அட்லீ .

தொடர்ந்து மூன்று திரைப்படங்களின் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக அமைந்தது.அதன் பின்னர் பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

பாலிவுட் சினிமாவை இயக்க மும்முரம் காட்டி வந்தார். அங்கு முதல் திரைப்படம் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் யாருக்கும் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடாது. ஆனால் அட்லீ அதை மிகச்சரியாக புரிந்து கொண்டு கிடைத்த வாய்ப்பின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி மாபெரும் வெற்றிப்படமாக்கினார்.

ஜவான் திரைப்படம் வெளியாகி உலக அளவில் கிட்டத்தட்ட ரூ. 1000 கோடி வசூல் ஈட்டி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்ட வருகிறது.

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றி:

அட்லீ இயக்கத்தில் வெளியாகிய ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றதால் சாருக் கானே மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்கலாம் என முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது .

இப்படியாக இன்று நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் இயக்குனர் அட்லீயை குறித்து பிரபல இயக்குனரான பேரரசு சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீக்கு பெரிய சவால் ஒன்றை விடுத்திருக்கிறார் .

அதாவது இயக்குனர் அட்லீ பெரிய டாப் ஹீரோக்களை வைத்து படம் எடுத்து எஸ்கேப் ஆகி வருகிறார். அவர் பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட் கொடுப்பது மிகவும் சுலபமான ஒன்றுதான்.

அட்லீக்கு பேரரசு சவால்:

ஆனால், நான் அவருக்கு ஒரு சவால் விடுக்கிறேன். அதாவது வளர்ந்து வரும் ஹீரோவான கவினை வைத்து அட்லீ ஒரு படம் எடுத்து அந்த படத்தை ஜவான் படம் ரேஞ்சுக்கு ஹிட் கொடுக்க வேண்டும்.

இது தான் அவருக்கு நான் விடுக்கும் சவால் என கூறி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நானும் விஜய் அஜித் போன்றவர்களின் படங்களை இயக்கிய பிறகுதான் பரத்தை வைத்து பழனி படத்தை இயக்கியிருந்தேன் என உதாரணத்தையும் கூறியிருக்கிறார் பேரரசு.

அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக அட்லீயின் இந்த சவால் ஏற்றுக்கொள்ள முடியுமா? என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version