படப்பிடிப்பில் அஜித்திடம் இதை மட்டும் பண்ணவே கூடாது.. அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.. இயக்குனர் ராஜகுமாரன்..

தமிழ் திரை உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்து என்று உச்சகட்ட நட்சத்திர என்ற அந்தஸ்தை அடைந்திருக்கும் அஜித் குமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவரை அஜித் என்று அழைப்பதோடு தல அஜித் என்று செல்லமாக இவரது ரசிகர்கள் அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். இவரின் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கைக்கு திருப்பு முறையாக இருந்தது.

தல அஜித்..

தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகரான தல அஜித் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கிரீடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற படங்களில் நடித்து அல்டிமேட் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

இதையும் படிக்க: பேரிச்சம் பழத்தை அதில் ஊற வச்சி குடுத்தாரு.. காமெடி நடிகர் அட்டூழியம்.. ரகசியம் உடைத்த ஷகிலா..!

இந்தியாவில் இருக்கும் புகழ் பெற்ற மனிதர்களின் பட்டியலில் 2012 ஆம் ஆண்டு வெளி வந்த பட்டியலில் அஜித்குமாருக்கு 61 வது இடம் கிடைத்தது. அதே நிலையில் இவர் 2014-ஆம் ஆண்டு இந்த பட்டியலில் பட்ட இடங்களில் முன்னேறி 51 வது இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல் 2013-இல் கூகுளில் அதிகம் தேடப்படும் தென்னிந்திய திரைப்பட நடிகராக இருக்கிறார்.

இவரைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகளை தற்போது இயக்குனர் ராஜகுமாரன் வெளியிட்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆச்சிரியத்தையும், சந்தோஷத்தையும் தந்துள்ளது.

இயக்குனர் ராஜகுமாரன்..

இயக்குனர் ராஜகுமாரன் நடிகை தேவயானி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்த இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர்களின் சம்மதத்தையும், எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு இன்று சிறந்த தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் இயக்குனர் ராஜகுமாரன் நீ வருவாயா என என்ற திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமின் துணை இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அத்தோடு திறந்த கதாசிரியருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதும் இவருக்கு கிடைத்துள்ளது.

ஒரு சமயம் தல அஜித்தை நடிக்க வைக்க அவருக்கு உரிய கதையை சொல்லும் போது அவர் அந்த கதையை விரும்பி கேட்டதோடு மட்டுமல்லாமல் கதையை முழுமையாக இரண்டு மணி நேரம் தொடர்ந்து கேட்டு அவருடைய நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திய பாங்கை பார்த்து அசந்து விட்டார்.

இதையும் படிக்க: என்ன வாடா… போடான்னு பேசுற.. சார்..ன்னு கூப்டு.. இது தான் சினிமாவா..? பிரபல நடிகர் குறித்து ஆர்.ஜே.பாலாஜி..

இதனை அடுத்து உலகில் எந்த ஒரு நடிகரும் இந்த அளவு பக்குவமாக ஒரு கதையை கேட்டிருக்க மாட்டார்கள் என்று கூறிய இயக்குனர் ராஜகுமாரன் அஜித்துக்கு எப்போதுமே ரீடேக் எடுக்கக்கூடிய விஷயம் பிடிக்காது. எப்போதுமே சிங்கிள் ஷாட்டில் முடித்து விட வேண்டும் என்று நினைப்பார் என்ற விஷயத்தையும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் மிகச்சிறந்த மனிதரான அஜித் மிகவும் அர்ப்பணிப்பு குணம் கொண்டு இருந்த காரணத்தால் இன்று சினிமாவில் இருந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்க முடிகிறது. என்னுடைய படத்தில் நான் கூறிய கதையை சிறப்பான முறையில் கேட்டு நடித்தவர் என்று பெருமையாக பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து தல அஜித்தை இயக்குனர் ராஜகுமாரன் புகழ்ந்து பேசியதை தல அஜித்தின் ரசிகர்கள் வரவேற்று உள்ளதோடு தல.. தல.. தான் என்பது போன்ற வாசகங்களை சொல்லி அவரை போற்றி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version