ரச்சிதா.. உன் வீடியோவை ரிலீஸ் பண்ணிடுவேன்.. மிரட்டும் நபர்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. ரச்சிதாவை பொருத்தவரை அவருக்கு அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது சரவணன் மீனாட்சி தொடர்தான்.

சரவணன் மீனாட்சி தொடர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு தொடராக இருந்தது. அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்கிற பெயரிலேயே வேறு வேறு ஜோடிகளை வைத்து அந்த தொடரை கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

அந்த வகையில் சரவணனாக கவின் நடித்த பொழுது தங்கமீனாட்சி கதாபாத்திரத்தில் ரச்சிதா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு பிக் பாஸில் கலந்து கொண்ட ரச்சிதாவிற்கு பிக் பாஸ் மூலமாக நிறைய வரவேற்புகள் கிடைத்தது. அதன் மூலம் எப்படியாவது சினிமாவில் கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்பதுதான் ரச்சிதாவின் ஆசையாக இருக்கிறது.

தமிழ் படம்:

இந்த வகையில் தமிழில் ஃபயர் என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நடிகை ரச்சிதா. இயக்குனர் ஜே எஸ் கே சதீஷ் குமார் இயக்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரச்சிதா கதாநாயகியாக நடித்தார். பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்தார். மேலும் இந்த திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், கே பி ஒய் பாலா போன்ற பலரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஃபயர் என்கிற திரைப்படத்தில் நடித்தேன் ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு பைசா கூட சம்பளம் தரவில்லை அதனால் இந்த படத்தில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

அதனை தனது ஸ்டோரியில் ஷேர் செய்த ரட்சிதா நான் பல காலங்களுக்கு முன்பே இந்த படத்தில் இருந்து விலகி விட்டேன். நீங்கள் தாமதமாகதான் இதை புரிந்து கொண்டீர்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று கூறிய ரச்சிதா அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான ஜே எஸ் கே சதீஸ் குறித்து பேசி இருந்தார்.

இயக்குனர் கொடுத்த பதிலடி:

அதில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என நினைக்கிறார்கள் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த இயக்குனரும் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார் வணக்கம் ரச்சிதா நீங்க நடிச்சதைதான் உங்கள் பிறந்தநாளுக்கு க்ளிம்ஸ் ஆக போட்டு இருக்கேன்.

நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடலை. இன்னும் படம் வெளியில வரும் பொழுது நீங்க நடித்த காட்சிகள் எல்லாமே வெளியில வரும். நீங்கள் சம்பளம் வாங்கிட்டுதான் நடிச்சிருக்கீங்க. இனமா நடிச்சு கொடுக்கல அதுக்கு அக்ரிமெண்ட் என் கையில இருக்கு. நீங்க பணம் வாங்குனதுக்கு ஆதாரமும் என் கையில இருக்கு.

அதனால உங்களை நீங்களே தாழ்த்திக்காதீங்க தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவில் போடுற மாதிரி ஆயிடும் என்று வெளிப்படையாக எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார் படத்தின் இயக்குனர். இந்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version