ஷங்கரின் குரு ஓமக்குச்சி நரசிம்மன்..! ஷங்கர் கொடுத்த குரு தட்சணை..!

தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக எப்போதுமே ஆல் டைம் ஹீரோவாக இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி ஒரு பிரமாண்ட திரைப்பட இயக்குனராக இருக்கிறாரோ அதேபோல இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டம் முதலே பெரிய திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக இருந்து வருகிறார்.

ஷங்கரின் திரைப்பட வாழ்க்கையில் தோல்வி என்பது மிக குறைவு தான் அதிகமான திரைப்படங்கள் அவருக்கு வெற்றி திரைப்படங்கள்தான் இயக்குனர் ஷங்கருக்கு ஆஸ்தான குருவாக இருந்தவர் யார் என்று யோசிக்கும் பொழுது பலரும் இதற்கு அளிக்கும் பதில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ சந்திரசேகர் என்பதாகதான் இருக்கும்.

ஷங்கரின் குரு:

எஸ் ஏ சந்திரசேகருக்கு முன்பே இயக்குனர் ஷங்கருக்கு குருவாக இருந்தவர் ஓமக்குச்சி நரசிம்மன். உண்மையில் ஷங்கர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம்தான் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அவருடன் சேர்ந்து 15 திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார் ஷங்கர்.

இப்போது போல ஒன்று இரண்டு திரைப்படங்களில் உதவி இயக்குனராக இருந்துவிட்டு அப்பொழுது இயக்குனராக மாறிவிட முடியாது. அதற்கு நிறைய போராட வேண்டி இருக்கும். அந்த வகையில் 15 திரைப்படங்களில் பணிபுரிந்து இருந்தார் ஷங்கர்.

ஆனால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு இயக்குனர் ஷங்கருக்கு நடிப்பின் மீதுதான் ஆர்வம் இருந்தது. ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. இயக்குனர் பாரதிராஜா பாக்யராஜ் போலவே இவரும் நடிகராக வேண்டும் என்று சினிமாவிற்கு வந்து பிறகு இயக்குனரான பிரபலமாகியுள்ளார்.

அப்பொழுது சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு முதலில் நாடகத் துறையில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார் ஷங்கர். அப்போதைய காலகட்டங்களில் எஸ்.வி சேகர் மாதிரியான ஒரு சிலர் நாடகங்களை நடத்தி வந்தனர்.

நாடகங்களில் உதவி செய்த நடிகர்:

அந்த நாடகங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் சினிமாவில் வாய்ப்பை பெற முடியும் என்பதால் அங்கு வாய்ப்பை தேடினார் ஷங்கர் அப்படியாக ஒரு நாடகக் குழுவில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்த சமயத்தில் அந்த நாடக குழுவில் ஒரு பெரிய நடிகராக அறியப்பட்டவர் ஓமக்குச்சி நரசிம்மன். ஓமக்குச்சி நரசிம்மனின் வித்தியாசமான காமெடி நடிப்பை கண்ட ஷங்கர் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகுதான் அவர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

பிறகு ஷங்கர் மாபெரும் இயக்குனர் ஆன பிறகு அவரது திரைப்படங்களில் தொடர்ந்து ஓமக்குச்சி நரசிம்மனுக்கு வாய்ப்புகளை கொடுத்தார் அந்த வகையில் இந்தியன், ஜென்டில்மேன், முதல்வன் ஆகிய மூன்று திரைப்படங்களிலும் படத்தின் இரண்டாவது காட்சியில் முக்கிய கதாபாத்திரமாக ஓமகுச்சி நரசிம்மன் வருவார்.

அந்த செண்டிமெண்டாலோ என்னவோ தெரியவில்லை அந்த மூன்று திரைப்படங்களுமே ஷங்கருக்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள். இப்படியாக தன்னுடைய குருவிற்கு செய்ய வேண்டிய மரியாதையை திரைப்படம் மூலமாகவே செய்தார் ஷங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version