இயக்குனர் ஷங்கரின் உண்மை முகத்தை கிழிக்கும் பிரபலம்.. ஷங்கரால் மூடப்பட்ட பெரிய நிறுவனங்கள்.. பெண்கள் மீது வக்கிரம்..

தமிழில் தொடர்ந்து அதிக பட்ஜெட் திரைப்படம் எடுக்கும் இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர். ஆரம்பத்தில் ஜென்டில்மேன் காதலன் என்று அவர் இயக்கிய திரைப்படங்களை விடவும் அதற்கு பிறகு அவர் இயக்கிய திரைப்படங்களில் அதிகமான செலவுகள் இருப்பதை பார்க்க முடியும்.

இப்போது வரை ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அதில் அதிக செலவு இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக படத்திற்கு தேவையில்லாத அனாவசியமான செலவுகள் அதிகமாக இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

ஷங்கர் திரைப்படங்கள்:

உதாரணத்திற்கு ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் அதிகமான பிரமாண்ட காட்சிகள் இல்லாத திரைப்படம் நண்பன். அந்த திரைப்படத்தில் செலவு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே படத்தின் பாடல்களில் அதிகமாக செலவு செய்திருப்பார்.

அந்த மாதிரியான செலவுகள் எல்லாம் தேவையில்லாதது என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கு நடுவே பிரபல சினிமா விமர்சகரான தமிழா தமிழா பாண்டியன் சங்கர் குறித்து நிறைய செய்திகளை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதில் அவருக்கு வரும் பொழுது அதிக பட்ஜெட்டில் படம் எடுக்கிறேன் என்று நிறைய தயாரிப்பாளர்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் ஷங்கர் என்று கூறுகிறார். தமிழா தமிழா பாண்டியன் இயக்குனர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தை இயக்கும்போது அந்த திரைப்படத்தை ஐங்கரன் நிறுவனம்தான் தயாரித்தது.

தயாரிப்பு நிறுவனங்கள்:

ஐங்கரன் நிறுவனம் பல காலங்களாகவே திரைப்படங்களை தயாரித்து வருகிறது. எந்திரன் திரைப்படத்தை ஆரம்பத்தில் ஐங்கரன் நிறுவனம்தான் தயாரித்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த திரைப்படத்தின் பட்ஜெட் அதிகமான காரணத்தினால் சன் பிக்சர்ஸ் அந்த திரைப்படத்தை கையில் எடுத்துக் கொண்டது.

பிறகு ஐங்கரன் நிறுவனம் குறைவாகவே திரைப்படங்களை தயாரிக்கிரது. அதேபோல பலம்பெறும் நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் பல வருடங்களாகவே திரைப்படம் எடுத்து வந்தது. அந்த நிறுவனமும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சிவாஜி திரைப்படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்திற்கு நிறைய செலவு ஆனது.

அதனை அடுத்து ஏ.வி.எம் நிறுவனம் கடன் வாங்கும் நிலைக்கு உள்ளானது அதோடு அதற்கு பிறகு ஏ.வி.எம் நிறுவனம் திரைப்படங்களே தயாரிக்கவில்லை. தற்சமயம் லைக்கா நிறுவனமும் கூட அப்படியான ஒரு சிக்கலில்தான் சிக்கி உள்ளது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படமாக்கப்பட்டு வந்தது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம். கமல்ஹாசனுக்கும் ஷங்கருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த படப்பிடிப்பில் நிறைய பிரச்சனைகள் இருந்ததாகவும் அதனால் பெரிய இழப்புகளை நிறுவனம் சந்தித்திருப்பதாகவும் கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன்.

இப்படி தமிழ் சினிமாவில் நிறைய தயாரிப்பு நிறுவனங்கள் தோல்வி அடைந்து சினிமாவை விட்டு போனதற்கு இயக்குனர் ஷங்கர் தான் காரணம் என்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version