ஏதோ ராணுவத்துக்கு குடுத்தா மாதிரி பெருமை வேற.. இயக்குனர் ஷங்கரை விளாசும் ரசிகர்கள்..! என்ன காரணம்..?

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் ஷங்கர் பற்றி யாரும் அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் திரை உலகுக்கு பிரம்மாண்டத்தை கொண்டு வந்து அனைவரது விழிகளையும் அகல விரித்து பார்க்க வைத்த ஷங்கர் தற்போது போட்டிருக்கும் பதிவால் இணையமே பற்றிக் கொண்டு எரிகிறது.

இதற்குக் காரணம் அண்மையில் இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்று இருப்பதோடு இயக்குனர் ஷங்கர் பற்றிய பிரம்மாண்டத்தையும் ரசிகர்கள் மத்தியில் தவிடு பொடி ஆக்கிவிட்டது

ஏதோ ராணுவத்துக்கு குடுத்தா மாதிரி பெருமை வேற..

ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த ஜீன்ஸ் ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன், 2.0 போன்ற படங்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.

இவர் இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக இருந்து சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அந்த வகையில் காதல், வெயில், கல்லூரி, ஈரம், இரட்டை சுழி போன்ற படங்களை நாம் இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

இந்தியன் திரைப்படத்தை அடுத்து இந்தியன் 2 திரைப்படமானது 2017 ஆவது ஆண்டிலேயே பூஜை போடப்பட்டு விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் விபத்தில் ஏற்பட்டதை அடுத்து ஏழு ஆண்டு இடைவெளிகள் கழித்து அண்மையில் திரை அரங்குகளில் வெளியிடப்பட்டது.

ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இந்த படமும் இருந்த நிலையில் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வண்ணம் படத்தில் கதை மற்றும் காட்சியமைப்புகள் இருந்ததால் படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியை தரவில்லை.
அதுவும் இல்லாமல் ஷங்கர் பற்றிய நெகட்டிவ் கமெண்ட்களை அதிக அளவு ஏற்படுத்தியது.

மேலும் இதனை அடுத்து இயக்குனர் ஷங்கர் தன்னுடைய மகனை சினிமாவில் ஒப்படைத்து விட்டதாகவும் அவனைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும் சினிமா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த தகவல் கடந்த இரண்டு நாட்களாக இணைப்பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஏதோ ராணுவத்திற்கு ஒப்படைத்தது போல பெருமை வேற..? என கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குனர் ஷங்கரை விளாசும் ரசிகர்கள்..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் அடையாளமாக பார்க்கப்பட்ட இயக்குனர் ஷங்கர் கடந்த சில திரைப்படங்களில் வெற்றி பெற தவறிவிட்டார்..

அதிலும் குறிப்பாக இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதன் பிறகு ஷங்கர் மீதான விமர்சனங்கள் மோசமாகின.

இந்நிலையில், தன்னுடைய மகனையும் சினிமாக்கு ஒப்படைத்து விட்டேன் என இவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்தியன் 3 திரைப்படம் ஷங்கருக்கு புத்துயிர் கொடுக்குமா..? மீண்டு வருவாரா ஷங்கர்..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன காரணம்..?

 

இதனை அடுத்து இது தான் காரணம் என்பதை தற்போது ரசிகர்கள் அனைவரும் புரிந்து கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயத்தைப் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் இந்தியன் மூன்று குறித்த விஷயங்களை ஷங்கர் எப்போது வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாக இயக்குனர் ஷங்கர் பதிலளிப்பார் என நம்பலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version