ஒரே ஜாதி என்பதால் தான் உடனே கை கோர்த்து கொண்டார்களா… சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி இணைந்து நடிக்க இதுதான் காரணமா?

டைரக்டர் சங்கர் தனது மகள் அதிதியை விருமன் படத்தில் கார்த்தியோடு இணைந்து நடிக்க சம்மதம் கொடுத்தார். அதை எடுத்து அதிதியை மற்ற நடிகர்கள் நடக்கும் படங்களுக்கு புக் செய்ய வந்த போது அவர் மறுத்துவிட்டார். குறிப்பாக சிம்பு படத்தில் நடிக்க அழைப்பு வந்த போது அதை அவர் மறுத்து விட்டார்.

பின்னர் இரண்டாவது படத்தில் இவர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனது. இதற்கு என்ன காரணம் என்று தற்போது பயில்வான் ரங்கநாதன்  வெளியிட்ட கருத்தை கேட்டவுடன் பகீர் என ஆகிவிட்டது.

 நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் வரும் போது இவருக்கு என்று எந்தவிதமான சினிமா பின்னணி இல்லாமல் இருந்தார். ஆரம்பத்தில் காமெடி கேரக்டரில் நடித்தவர் தற்போது ஒரு மிகப் பெரிய ஸ்டாராக உருவெடுத்து மற்ற நடிகர்களுக்கு இணையான போட்டியை உருவாக்கியுள்ளார்.

தற்போது மற்ற தயாரிப்பில் நடிக்காமல் தன்னுடைய புரோடக்சனில்  நடிப்பதை மிகவும்  விரும்புகிறார். அதற்கான பணம் இல்லை என்றாலும் இவரது நட்பு வட்டாரங்கள் அவருக்கு பணம் கொடுத்து சினிமாவை தயாரிக்க சொல்கிறார்கள்.

இவரின் நண்பர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக அவர்களை கூட திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இதுவும் ஒரு ராஜதந்திர முறை என்று நாம் கூறலாம்.

ஏனென்றால் தன்னை சுற்றி இருந்த நண்பர்களை மிகப்பெரிய தயாரிப்பாளர்களாக ஹீரோவாக இவர் மாற்றி தனக்கென்று ஒரு பேக்ரவுண்ட் வலுவாக தற்போது உருவாக்கிவிட்டார். தற்போது மிக சரியான பலத்தோடு திரைத்துறையில் இவர் பல வெற்றிகளை அடைவதற்கு இதுவே பக்கபலமாக இருக்கும் என்று நாம் கூறலாம்.

இதையடுத்து  இவரின் அடுத்த படத்திற்கு நடிகையாக சங்கர் டைரக்டரின் இரண்டாவது மகள் அதிதியை புக் செய்து இருப்பதற்கு காரணம் என்ன என்றால் இயக்குனர் சங்கரும் சிவகார்த்திகேயனும் ஒரே சாதியை சார்ந்தவர்கள் என்பதால் தான் இணைந்திருக்கிறார்கள் என்று ஒரு குண்டை போட்டு இருக்கிறார் பயில்வான். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது.

எனினும் எந்த சாதிய வேற்றுமைகளும் ஒற்றுமைகளும் எந்த அளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊடுருவி இருக்கிறது என்பதை இது பறைசாற்றுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …