இவரால வாழ்க்கையே போச்சு.. திருமதி செல்வம் அர்ச்சனா வேதனை..

இன்று பெரிய திரையை விட சின்ன திரையின் ஆதிக்கம் அதிக அளவு அதிகரித்துள்ளது. மேலும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் தாக்கம் ஒவ்வொரு குடும்பங்களிலும் அதிக அளவு உள்ளது. அந்த வரிசையில் திருமதி செல்வம் சீரியலில் நடித்த அபிதா அண்மையில் சில விஷயங்களை பகிர்ந்து இணையத்தில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

திருமதி செல்வம் சீரியல் நடித்த அபிதாவின் பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ்நாட்டில் பிறந்தது வளர்ந்தது சென்னையில் என்பது பலருக்கும் தெரியாது.

திருமதி செல்வம் அர்ச்சனா..

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அதில் நடிப்பதற்காக பல வகைகளில் முயற்சி செய்வார்கள். ஆனால் அபிதாவிற்கோ ஷூட்டிங் பார்க்க சென்ற இடத்தில் சினிமா வாய்ப்பு தேடி வந்தது என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

ஆரம்பத்தில் சீரியல்களில் சின்ன ரோல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் சன் டிவி ஆரம்ப நிலையில் கிரிமினல், ஜீவன் என்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இந்த வகையில் இவர் கோல்மால் என்ற திரைப்படத்தில் படு கிளாமராக நடித்ததை எவராலும் இன்று வரை மறக்க முடியாது. இதனை அடுத்து தான் இயக்குனர் பாலாவின் சேது படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.

அபிதா சொன்ன விஷயம்..

அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறாமல் நடிக்க ஒப்புக்கொண்ட அபிதா ஏன்டா அந்த படத்தில் நடித்தோம் என்று சொல்லக்கூடிய வகையில் பாலாவின் அத்துமீறல்கள் இருந்தது என்று சொல்லலாம்.

அத்தோடு பாலா தனக்கு நடிக்க வரவில்லை என்று பலர் மத்தியில் படு கேவலமாக தன்னை திட்டியதாக திருமதி செல்வம் அர்ச்சனா தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் நடிப்பு சரி வராது என்று அந்த படத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க ஹீரோயினியை பாலா தேடினார் என்று கூறினார்.

கடைசியாக சேது படத்தில் அந்த ரோலை செய்ய என்னையே தேர்வு செய்தார். சினிமாவில் அனுபவம் இல்லாத நான் பாலாவிடம் பன்மடங்கு திட்டுகளை வாங்கி இருப்பதோடு சரியாக நடிப்பு வரவில்லை என்ற ஏச்சையும் கேட்டிருக்கிறார்.

இவனால தான் வாழ்க்கையே போச்சா..

இதனை அடுத்து இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை என்று வீட்டில் அவரது அம்மாவிடம் சொல்லி பலமுறை அழுததாக இந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து அவர் அம்மா இவரை ஊக்கப்படுத்திய காரணத்தால் தான் சேது படத்தில் அற்புதமாக தன்னால் நடிக்க முடிந்தது என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.

இதை அடுத்து ராமராஜனோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ராமராஜோடு இணைந்து நடித்த போது இவருக்கும் ராமராஜருக்கும் இடையே காதல் ஏற்பட்டது உள்ளதாக கிசுகிசுக்கள் பரவலாக பரவியது.

இதனால் இனி மேல் சினிமா துறையே வேண்டாம் என்று முடிவு செய்த இவர் கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அத்தோடு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் திருமதி செல்வம் சீரியல் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் தற்போது திருமதி செல்வம் அர்ச்சனா என்ற பெயரை சொன்னால் தான் இவரை தெரிந்து கொள்ளக்கூடிய அளவு அந்த சீரியலில் பக்காவாக தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி பலர் மத்தியிலும் பாராட்டுதல்களை பெற்று விட்டார்.

இதையும் படிங்க: கூவத்தூர் திரிஷா.. 3 கிலோ தங்கம்.. கோடி கோடியாய் பணம்.. அந்த வேலை பார்த்த கருணாஸ்.. சந்தேகம் உடைத்த பிரபலம்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டதோடு மட்டுமல்லாமல் திரை உலகில் இவரால் தான் வாழ்க்கையே போச்சு என்று திருமதி செல்வம் அர்ச்சனா வேதனையோடு தெரிவித்த கருத்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version