கலகலப்பு 3 படத்திற்கு தயாராகும் சுந்தர் சி.. ஹீரோ ஹீரோயின் யாருன்னு பாருங்க..!

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர் சி இது வரை தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

சுந்தர் சி ஆரம்ப நாட்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதனை அடுத்து முதன் முறையாக முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

இயக்குனர் சுந்தர் சி..

இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற திரைப்படங்களை இயக்கியதை அடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

மேலும் இவர் மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்ற நகைச்சுவை கலந்த திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

திரை உலகில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, பன்முக திறமையை கொண்டிருக்கும் இவர் அண்மையில் இயக்கி தயாரித்த திரைப்படமான அரண்மனை 4 திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை இவருக்கு கொடுத்தது.

அது-மட்டுமல்லாமல் இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்து படத்திற்கு சிறப்பான பெயர் பெற காரணமாக இருந்தார்கள். அத்தோடு குஷ்பூ, சிம்ரன் ஆகியோர் ஒரு பாடலுக்கு நடனமாடி படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தார்கள்.

கலகலப்பு 3-க்கு தயார் ஆகிறாரா?

அரண்மனை 4 திரைப்படத்தின் வெற்றியை அடுத்து சுந்தர் சி-யின் அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளி வந்துள்ளது. அந்த வகையில் கலகலப்பு 3 படத்தை இயக்கி தயாரிக்க சுந்தர் சி முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பகுதிகள் வெளி வந்து வெற்றி தந்த சூழ்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பகுதியில் விமல் மற்றும் சிவா இணைய உள்ளதாக செய்திகள் வெளி வந்ததை அடுத்து படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்த அப்டேட் தற்போது தெரிய வந்துள்ளது.

ஹீரோயினி யார் தெரியுமா?..

அந்த வகையில் அரண்மனை படத்தைப் போலவே கலகலப்பு படமும் அடுத்தடுத்த பாகங்கள் ஆக வெளி வரக்கூடிய சூழ்நிலையில் இந்த படத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா சந்தானம் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் இரண்டாவது பாகம் 2018 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதில் சிவா, ஜெய், ஜீவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

மேலும் கலகலப்பு 3 படத்தில் வாணி போஜன் இணைய உள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பதை பட குழு விரைவில் அறிவிக்கும்.

இதனை அடுத்து தற்போது கலகலப்பு 3 வெளி வரக்கூடிய சூழ்நிலையில் படத்தின் ஹீரோயினி பற்றி அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் படம் சிறப்பாக வரும் என்று சொல்லி இருப்பதோடு படத்தைப் பார்க்க ஆவலாக காத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரவலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version