வின்னர் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கவிருந்தது வடிவேலு இல்லை.. இவரு தான்..! சீக்ரெட் உடைத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி க்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமான ஜனரஞ்சகமான படங்களை தருவதில் அவர் ஒரு சிறந்த இயக்குனராக பார்க்கப்படுகிறார்.

இயக்குனர் சுந்தர் சி

ஏனெனில் ஒரு ரசிகராக அவர் படத்தை இயக்குகிறார். அதனால் ஒரு ரசிகனுடைய பார்வையில், அவரது படம் வெற்றி படமாக அமைகிறது என்பது தான் உண்மை. கவுண்டமணி, விவேக் சந்தானம், யோகி பாபு என பல காமெடி நடிகர்கள் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ளனர். துவக்கத்தில் சில படங்களில் தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இவரது பல படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரண்மனை 4 தந்த வெற்றி

சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற சுந்தர் சி பல விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்துக்கொண்டார்.

வின்னர்

கடந்த 2003 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண் நடிப்பில் வெளிவந்த படம் வின்னர். இந்த படத்தில் நம்பியார், எம் என் ராஜம், வடிவேலு ரியாஸ் கான், முத்துக்காளை என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 21 ஆண்டுகள் ஆனாலும், இன்னமும் வின்னர் படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

கைப்புள்ள

ஏனெனில் அந்த படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தலைவராக கைப்புள்ள கேரக்டரில் மிக அற்புதமாக காமெடி செய்திருப்பார் நடிகர் வடிவேலு.

விவேக் நடிக்க வேண்டியது

இதுகுறித்து அந்த நேர்காணலில் இயக்குனர் சுந்தர் சி கூறுகையில், வின்னர் படத்தில் வடிவேலுவுக்கு பதிலாக, முதலில் விவேக்கை தான் நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் கடைசி நேரத்தில் சில பிரச்சனைகளால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனக்கும் அவருக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது. அதன் பின்பு பல ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றாமல் இருந்தோம்.

வீராப்பு படத்தில்…

வீராப்பு படத்தில் நான் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விவேக் தான் வேண்டும் என்று கேட்டார். கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதை என நான் ஒரு கான்செப்ட் சொன்னபோது, அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து அரண்மனை 3 திரைப்படம் வரை பல படங்களில் விவேக்குடன் பணியாற்றினேன்.

தினமும் வாகிங், ஜாக்கிங் செல்வார்

நடிகர் விவேக் மிகவும் உடம்பு ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர். எப்போதும் ஜாகிங், வாக்கிங் செல்லக் கூடியவர். அரண்மனை 3 படத்தை குஜராத் பக்கத்தில் ஒரு கிராமத்தில் எடுத்துக் கொண்டிருந்தோம். அங்கேயும் தினமும் வாக்கிங் சென்று விட்டு வருவார்.

கை உடைந்து போன மாதிரி பீலிங்

கடைசியாக டப்பிங் பேசி விட்டு சென்ற அவர், ஒரு சின்ன மிஸ்டேக் ஆகிடுச்சு, மண்டே வந்து பேசுறேன்னு சொன்னார். அதன் பின்னர் அவர் இறந்த தகவல்தான் வந்தது. ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டேன். விவேக் மனோபாலா எல்லாம் இல்லாதது ஒரு கை உடைந்து உடைந்து போன மாதிரி இருக்கிறது எனக்கு, என்று சுந்தர் சி பீலிங்காக அந்த நேர்காணலில் பேசி இருக்கிறார்.

விவேக் ரசிகர்கள் ஏமாற்றம்

வின்னர் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க வேண்டியது வடிவேலு இல்லை.. விவேக் தான் என்று நீண்ட நாட்களுக்கு பின் ரகசியத்தை உடைத்திருக்கிறார் டைரக்டர் சுந்தர் சி. அப்படி என்றால் கைப்புள்ள கேரக்டரில் காமெடியில் விவேக் அசத்தியிருப்பாரே என அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version