மகனின் வாழ்க்கையே போச்சு.. நம்ப வைத்து முதுகில் குத்திய வடிவேலு.. கதறும் பிரபலம்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடி நடிகராக பல சகாப்தங்களாக நீடித்து வருபவர்தான் நடிகர் வடிவேலு. 1990களில் துவங்கி இப்போது இருக்கும் தலைமுறையினர் வரை கொண்டாட கூடிய ஒரு காமெடி நடிகராக வடிவேலு இருந்து வருகிறார்.

ராஜ்கிரண்தான் முதன் முதலில் நடிகர் வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்து வந்த காலகட்டத்திலேயே அவர்களுக்கு மத்தியில் ஸ்கோர் செய்து தனக்கான தனித்துவமான இடத்தை பிடித்தார் வடிவேலு.

வடிவேலுவை வளர்த்துவிட்ட பிரபலம்:

அப்படியே வடிவேலு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொடுவதற்கு நிறைய பிரபலங்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படியான ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர் இயக்குனர் வி.சேகர் தமிழில் பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறி போச்சு பொங்கலோ பொங்கல், மாதிரியான நிறைய வெற்றி படங்களை இயக்கியவர்தான் இயக்குனர் வி சேகர்.

பொதுவாக குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை கதைக்களமாக கொண்டு திரைப்படங்களை இயக்க கூடியவர் வி.சேகர். இதனாலேயே வி சேகர் திரைப்படங்கள் இப்போது வரை மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமான திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் வடிவேலுவை பெரிதாக உயர்த்திவிட்ட  இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வி சேகர். அவரது திரைப்படங்களில் நடித்த பிறகுதான் முதன்முதலாக வடிவேலு கார் வாங்கினார். அப்படிப்பட்ட வி சேகருக்கு வடிவேலு நம்பிக்கை துரோகம் இழைத்த சம்பவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

நம்பி மோசம் போன இயக்குனர்:

அதில் அவர் கூறும் பொழுது கேப்டன் விஜயகாந்தை வடிவேலு அரசியல் காரணமாக மேடையில் கீழ்த்தரமாக பேசினார். ஆனால் விஜயகாந்த் அவருக்கு நிறைய உதவிகளை செய்திருக்கிறார். இருந்தும் அவரை மோசமாக வடிவேலுக்கு பேசியது என்னையும் ஒரு விதத்தில் பாதித்தது.

நான் சரவணப் பொய்யன் என்கிற ஒரு படத்தை இயக்குனேன். அதில் என்னுடைய மகனை கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்தேன். இந்த படத்தில் வடிவேலுவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி கேட்டேன்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார் ”உங்களது திரைப்படங்களின் மூலம் நீங்கள் என்னை எப்படி தூக்கி விட்டீர்களோ அதேபோல உங்கள் மகனையும் தூக்கி விடுகிறேன்” என்று கூறினார். நானும் அவரது பேச்சை கேட்டு பட வேலையை தொடங்கினேன் ஆனால் அரசியலுக்கு சென்ற வடிவேலு விஜயகாந்த் குறித்து நிறைய தவறாக பேசினார்.

கடைசியில் திமுக அந்த தேர்தலில் தோல்வியடைந்தது. அதனை அடுத்து வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் திரும்ப மதுரைக்கு சென்று விட்டார் மீண்டும் நடிக்க வரமாட்டேன் எனவும் என்னிடம் கூறிவிட்டார். இதனால் அந்த படத்தில் வடிவேலுக்கு பதிலாக கருணாஸை நடிக்க வைத்தேன். அந்த படம் தோல்வி அடைந்தது அதனால் என்னுடைய மகனின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டது என்று கூறுகிறார் வி சேகர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version