இளைய ராஜாவுக்கு மன்னிப்பே கிடையாது..! ராட்சச வன்மம்..! ரகசியம் உடைத்த இயக்குனர்..!

இசை உலகில் ஜாம்பவானாக இன்று வரை யாருமே அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் இசைஞானி இளையராஜா பற்றி இயக்குனர் ஒருவர் அவரை வன்மம் மிக்க அசுரனாக சித்தரிப்பது இணையங்களில் வைரலாக மாறி உள்ளது.

திரை உலகில் இசையமைப்பாளரான இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மறையாது என்று சொல்லக்கூடிய வகையில் ஏறக்குறைய 1500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இன்று இருக்கும் இளம் தலைமுறை தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொண்டவர்.

இசைஞானி இளைய ராஜா..

மேலும் தற்போது இருக்கும் ஏ ஆர் ரகுமான், அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்களுக்கும் கடுமையான டப்பை கொடுத்து வரக்கூடிய இளையராஜா இசையில் அடுத்ததாக விடுதலை 2 வரவுள்ளது.

மேலும் இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வரக் கூடிய சூழ்நிலையில் அந்தப் படத்தில் தனுஷ் நடிப்பதாக விஷயங்கள் இணையங்களில் கசிந்து வந்தது.

இந்நிலையில் இளையராஜா பற்றி கடுமையான வார்த்தையால் தாக்குதல்களை பலரும் சொல்லி வரக்கூடிய நிலையில் இயக்குனர் வேலு பிரபாகர் இளையராஜா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்து சென்னைக்கு வந்து என்று இசைஞானியாக ஜொலிக்கும் இவர் ஆரம்பத்தில் அன்னக்கிளி படத்தில் இவரது இசை பயணத்தை ஆரம்பித்து தற்போது விடுதலை 2 படம் வரை தன்னுடைய இசையால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார்.

ராட்சச வன்மம் பிடித்த மனிதன்..

இசைஞானி என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் இவர் புகழின் உச்சத்தில் இருக்கும் போது மிக நல்ல முறையில் பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். ஆனால் இவரை எதிர்க்கக்கூடிய நபர்களை நிர்மூலம் செய்யக்கூடிய தலைகனம் பிடித்தவர் என்ற பேச்சுக்கள் உள்ளது.

மேலும் இளையராஜாவிற்கு இருப்பது இயல்பான குணம் தான் அவருக்கு தலை கணம் இல்லை என்று ஒரு சாரார் கூறி வருகின்ற வேளையில் இந்த பேச்சானது தற்போது விவாதங்களாக உருவெடுத்து மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மேலும் இளைய ராஜா பற்றி எதை பேசினாலும் அது பெரும் பஞ்சாயத்தாக மாறிவிடுகிறது. இதை அடுத்த தான் பாடலுக்கு முக்கியம் மொழியா, இசையா என்று பேசிய விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் இளைய ராஜாவின் சிம்பொனியை யாரும் மறக்க முடியாது. இதனை அடுத்து ஐஐடியில் இளையராஜா பெயரில் இசை ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைக்க இருக்கிறார்கள். அதற்கான அடிக்கல்லையும் இசைஞானியே சென்று செய்தார்.

மன்னிப்பே கிடையாது..

இந்நிலையில் இயக்குனர் வேலு பிரபாகர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இளையராஜாவிடம் நீங்கள் ஒரு முறை வெறுப்பை சம்பாதித்து விட்டால் உங்களுக்கு மன்னிப்பு கிடைக்காது. ஆம் அந்த நபர் யாரையும் எளிதில் மன்னிக்க கூடிய குணம் படைத்தவர் அல்ல.

அத்தோடு சினிமா பாடல்கள் புகழை ஏதோ தேவைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இங்கு இருக்கும் பல நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு புகழை வைத்து பலவற்றை வாங்கி இருக்கலாம்.

ஆனால் இளைய ராஜா அப்படி இல்லை. மனதில் பட்டதை எளிதில் கூறக்கூடிய இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூகம் வைத்துள்ளது. அப்படித் தான் இளையராஜா மீதும் வன்மம் காட்டப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இளைய ராஜா யாருக்கும் உதவி செய்ய மாட்டார் என்று சொல்லி வருகிறார்கள். அது தவறு தான் வளர்ந்து கொண்டிருக்கும் போதே தன்னுடைய குடும்பக் கிளைகளை பெரும் மரமாக வளர்த்தவர்.

அவர் அது எவ்வளவு பெரிய விஷயம் அந்த பெரிய பண்பு உங்களுக்கு தெரியவில்லையா? எடுத்துக்காட்டாக என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்.

என் சகோதரருக்கு 200 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் நான் வாழ்வதற்கு சொந்த வீடு கிடையாது. இரண்டு சீரியல்களை எடுத்து அவன் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். எனவே தான் இளைய ராஜாவோ எனக்கு பணமே இல்லாமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று பெருமையாக பேசினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version