அந்த மாதிரி சீன் வச்சா என்னை ஆடியன்ஸ் என்ன பண்ணுவாங்க!.. பத்திரிக்கையாளர் கேள்வியால் நொந்துப்போன வெங்கட் பிரபு!.

சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அதற்கு முன்பு இயக்குனர் பேரரசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் பேரரசு. அந்த சமயத்திலேயே சிவகாசி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு.

இருந்தாலும் கூட அவருக்கு படம் இயக்குவதில்தான் அதிகமாக இருந்தால் அதில் கவனம் செலுத்தினார். நிறைய வெற்றிகளை கொடுத்த வெங்கட் பிரபு தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

படத்தில் 3 விஜய் கதாபாத்திரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த இரண்டு திரைப்படங்களும் விஜய் ரசிகர்களுக்கு முக்கியமான திரைப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆடியன்ஸ் என்ன பண்ணுவாங்க

ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் அறிவியல் புனைவுக்கதை படமாக வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது. அந்த வகையில் கோட் திரைப்படமும் ஒரு அறிவியல் புனைவு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது இந்த ட்ரைலர் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பு கோட் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகின. அப்போது இதுக்குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தன.

பத்திரிக்கையாளர் கேள்வியால்

இதனால் படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவான ரெஸ்பான்ஸ்களே வந்து கொண்டிருந்தது. ஆனால் அது அனைத்தையும் ஓரம் தள்ளியிருக்கிறது கோட் திரைப்படத்தின் ட்ரைலர். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

அதேபோல மக்கள் எதையெல்லாம் விமர்சனம் செய்தார்களோ அதை எல்லாம் ட்ரைலரில் சரி செய்து வெளியிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி கோட் திரைப்படம் குறித்து பேசி இருந்தார் வெங்கட் பிரபு.

நொந்துப்போன வெங்கட் பிரபு

அப்போது பத்திரிகையாளர்கள் நிறைய பேர் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு வந்தனர். ஆனால் அனைவருக்குமே பொறுமையாக பதில் அளித்து வந்தார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் ஒருவர் அந்த காலகட்டம் முதலே மோகன் காதல் நடிகராக இருந்து வந்திருக்கிறார்.

நடிகர் பிரசாந்தம் அதே மாதிரி இருந்து வந்திருக்கிறார் அவர்களுக்கெல்லாம் இந்த படத்தில் தனியாக பாடல்கள் இருக்கிறதா? என்று கேட்டிருந்தார் இதனை கேட்ட வெங்கட் பிரபுவுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.  அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு கூறும் போது நடிகர் பிரசாந்த் மற்றும் மோகன் மாதிரியான நடிகர்களுக்கு எல்லாம் விஜய் படத்தில் காதல் பாடல்கள் தனித்தனியாக வைத்தால் படத்தை பார்க்கும் ஆடியன்ஸ் என்னை என்ன பண்ணுவாங்க? நீங்களே பதில் சொல்லுங்க என்று அந்த பத்திரிகையாளரை நேரடியாக கேட்டார் வெங்கட் பிரபு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version