அந்த நடிகையுடன் இருக்கும் போது உறுதியானது.. விவாகரத்து காரணம் உடைத்த DD..!

பிரபல தொகுப்பாளினியாக டிடி என்றும் திவ்யதர்ஷினி தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சின்ன வயதிலிருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்ட டிடி,

தொகுப்பாளினி டிடி:

தொகுப்பாளராக தனக்கான தனி இடத்தையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டார். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கி வந்த காபி வித் டிடி மூலம் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது என்று சொல்லலாம்.

இதன் மூலம் அவர் மிகப்பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு பேசப்பட்டார். ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வித் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் T 20 , காபி வித் டிடி,

உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளியாக கடந்த 2013 ஆம் ஆண்டில் விகடன் விருதும் பெற்றிருக்கிறார்.

இதனிடையே டிடி கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளிலும் ஒரு சில ரோல்களில் நடித்து வந்தார். ஆனால் அதெல்லாம் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

படங்கள் கைகொடுக்கவில்லை:

இதனால் தொடர்ந்து ஆங்கர் பணியை சிறப்பாக செய்யலாம் என முடிவெடுத்து தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த நிலையில் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக்கொண்டோமானால் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து,

பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தில் விக்ரம்,விஜய் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

இதனிடையே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

விவாகரத்து:

ஆனால் இதுநாள் வரைவாகரத்துக்கு என்ன காரணம் என டிடி வாய் திறந்து எந்த ஒரு இடத்திலும் சொன்னதே கிடையாது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனத்துக்கு விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ள டி டி
என்னோட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு தோல்வி என்று சொல்ல முடியாது

எனக்கு நிறைய விஷயங்களை பாடங்களையும் கற்றுக் கொடுத்தது விவாகரத்து தான். அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருந்தால் மட்டும் போதும் என அந்த உறவிலிருந்து வெளியில் வர நினைத்துதான் ,

அப்படி ஒரு முடிவை எடுத்தேன். ஆனால் அப்போதைய சூழ்நிலையும் எனக்கு பல பல விஷயங்களில் உதவியாக இருந்தது.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய வாழ்க்கையில் விவாகரத்து ஒரு மகிழ்ச்சியான தருணமாக தான் இருந்தது காரணம் அந்த சமயம் எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

மனதளவில் நான் என்னை தேற்றிக்கொண்டு தினமும் கடுமையாக உழைத்து வேலைகளில் என்னை நான் பிஸியாக வைத்துக் கொண்டேன்.

அந்த நடிகையுடன் இருக்கும் போது விவாகரத்து உறுதி:

ஒருமுறை நான் ரம்யா கிருஷ்ணனை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோதுதான் விவாகரத்து எனக்கு உறுதியான தகவல் தெரியவந்தது.

அப்போது ஒரு நிமிடம் எல்லாமே நம் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என உணர்ந்து மீண்டும் அந்த அடுத்த நொடியில் எனது பணியை நான் தொடர்ந்தேன்.

என்ன இருந்தாலும் இது எல்லாம் சந்தித்து தானே ஆக வேண்டும் என்று நினைத்துக் எனது அடுத்த கட்டத்தை நகர்ந்தேன் என மிகவும் மெச்சூர் ஆக பதில் அளித்து இருக்கிறார் டிடி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam