பல ஆண்டுகளாக சின்னத்திரை தொகுப்பாளினியாக பயணித்து வரும் திவ்யதர்ஷினி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஸ்வா இமை போல் காக்க படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் பிக்பாஸ் வருண் ஹீரோவாக நடித்திருக்கிறார் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
தன்னுடைய மூட்டுக்களில் ஏற்பட்ட பிரச்சனையால் என்னால் நீண்ட தூரம் நடக்க முடியாது. அதனால்தான் இப்படி செல்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இப்படியேதான் காபி வித் காதல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார்.
இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் நடிகை திவ்யதர்ஷினிக்கு விரைவில் குணமாக வேண்டும் என்று தங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்தனர். தொடர்ந்து சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக பதிவு செய்து வரும் நடிகை திவ்யதர்ஷினி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் விதமான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தன்னுடைய 13வது வயதில் தடயம் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கிய இவர் அதன்பிறகு தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முயற்சி செய்தார் அதன் பிறகு தொகுப்பாளினி என்ற வேலையே இவருடைய நிரந்தரமான வேலையாக மாறிவிட்டது.
பொழுதுபோக்காகவே தொகுப்பாளினி வேலையை செய்ய ஆரம்பித்தார் திவ்யதர்ஷினி. கடைசியில் இதுவே வாழ்க்கைக்குமான வேலையாகிவிட்டது என்பது பலரும் அறிந்திராத விஷயம்.