விவாகரத்தான நடிகரை திருமணம் செய்யும் திவ்யதர்ஷினி..! அவரே வெளியிட்ட தகவல்..!

இப்போதெல்லாம் திருமணத்துக்கு காத்திருக்கும் நடிககைளும். திருமணம் செய்துவிட்டு கணவரை விட்டு பிரிந்து அல்லது விவாகரத்து செய்து விட்ட நடிகைகளும், பிரபல நடிகரை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக கூறுவது பேஷனாகி விட்டது.

ஏனெனில் அப்படி பிரபலத்துடன் தன்னை இணைத்து வைத்து பேசுவதும், அவரை கல்லூரி நாட்களில், பள்ளி நாட்களில் காதலித்ததாக கூறுவதும் சமீபமாக டிரெண்டிங் ஆகி வருகிறது.

டிடி திவ்யதர்ஷினி

நடிகை திவ்யதர்ஷினி சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரமாக தொகுப்பாளினியாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

திவ்யதர்ஷினிக்கு விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக காப்பி வித் டிடி என்பது மிகப்பெரிய அடையாளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிடி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையில் தனிமையில் தான் இருந்து வருகிறார்.
டிடி என்கிற திவ்யதர்ஷினி, நீண்ட காலமாக விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அவர் ரியாலிட்டி ஷோக்கள், சினிமா விருது நிகழ்ச்சிகள், நடிகர், நடிகைகள் பேட்டிகள் என பலவற்றையும் நேரடியாக தொகுத்து பேசி வழங்கியவர்.

நடிகர்களிடம் நேர்காணல்

குறிப்பாக பிரபல நடிகர் நடிகைகளிடம் பேட்டி எடுக்கும் போது, பல சுவாரசியமான விஷயங்களை, அவர்களே அறியாமல் வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு, அவர்களை கேள்விக்கணைகளால் தொடுத்து அவர்களிடம் இருக்கும் உண்மைகளை சிரித்து சிரித்து பேசிய வாங்குவதில், சுவாரஸ்யமான தகவல்களை வழங்குவதில் டிடி கில்லாடி என்றே சொல்லலாம்.

ஆனால் டிடி சொந்த வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சந்தித்தவர். சிறிய வயதில் அவரது தந்தை இறந்த நிலையில், குடும்ப பொறுப்புகளை இவரும் இவரது அக்கா பிரியதர்ஷினி (சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிப்பவர்தான் பிரியதர்ஷினி) இவர்கள் இருவரும் தான் குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.

விவாகரத்து

இந்நிலையில் தனது நீண்ட கால நண்பரை திருமணம் செய்த திவ்யதர்ஷினி, ஒரு கட்டத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அவரது திருமண வாழ்க்கை பாதை பாதியில் முடிந்து போனது.

ஆனால் தனது மணவாழ்க்கை குறித்து பெரிய அளவில் தனக்குள் வருத்தங்கள் இல்லை என்று கூறி வருகிறார் நடிகை திவ்யதர்ஷினி. கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், தனிமையில் தான் இருந்து வருகிறார்

ஹிருத்திக் ரோஷன் மீது காதல்

இப்போது ஒரு இன்ஸ்டா உரையாடல் ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷனை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்ள எனக்கு ஓகே, அவருக்கு ஓகேவா எனத்தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஹிருத்திக் ரோஷன் தனது மனைவி சூன்சன் கான் என்பவரை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். மேலும் தற்போது சபா ஆசாத் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

திருமணம் செய்ய விருப்பம்

இந்நிலையில், விவாகரத்தான நடிகர் ஹிருத்திக் ரோஷனை திருமணம் செய்ய விரும்புவதாக திவ்யதர்ஷினி கூறியிருக்கிறார். அவரே வெளியிட்ட இந்த தகவல் செம வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam