இவ்ளோ அல்பத்தனமான ஆளா இருக்கீங்க… மேடையிலேயே சமந்தாவை விளாசிய திவ்யதர்ஷினி..!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

விஜய் டிவியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்து வருபவர் டிடி.

அதுமட்டுமின்றி விருதுவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் டிடி முன்னிலை வகிக்கிறார்.

இதுவரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி20, ஜோடி சீசன் 7, காபி வித் டிடி போன்றவை திவ்யதர்ஷினி பங்கேற்று நடத்திய முக்கிய நிகழ்ச்சிகளாக உள்ளன.

அதுமட்டுமின்றி முக்கிய பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழா, சக்சஸ் மீட் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர் டிடி.

கேள்விக்கணைகளை தொடுப்பவர் டிடி

ரஜினி, கமல், நயன்தாரா, விஜய், திரிஷா என முன்னணி ஸ்டார் நடிகர்களாக இருந்தாலும் சங்கடமே இல்லாமல் கேள்விக்கணைகளை தொடுப்பவர் டிடி. எந்தவிதமான கேள்விகளையும் சிரித்தபடியே நாசூக்காக கேட்டு விடுவார்.

சில முன்னணி நடிகர், நடிகையர் கூட இதுபோன்ற நேர்காணல் தர முன்வரும்போது, நேர்காணல் செய்பவர் யார் என தெரிந்துவிட்டால் குறிப்பாக டிடி என்றால் உடனே ஓகே சொல்லி விடுகின்றனர்.

அந்தளவுக்கு டிவி சினிமா நட்சத்திரங்களுக்கு பிடித்த ஒரு கேள்வியாளராக இருப்பவர்தான் டிடி.

காபியுடன் காதல்

தமிழ் சினிமாவில் சில படங்களில் சில காட்சிகளில் டிடி நடித்துள்ளார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபியுடன் காதல் என்ற படத்தில் டிடி நடித்திருந்தார்.

நடிகை சமந்தா தமிழில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு நடிகர் விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான 10 எண்றதுக்குள்ள படம் வெளியானது.

அப்போது சமந்தா மற்றும் விக்ரம் இருவரும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கையில் வைத்திருந்த பர்ஸ் குறித்து தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இது என்ன என்று கேள்வி அனுப்பினார்.

அதற்கு சமந்தா இதுதான் மணி பர்ஸ். இதில் பணம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார் இதனை கேட்ட திவ்யதர்ஷினி நீங்கள் எவ்வளவு பெரிய ஹீரோயின் இப்படி அல்பத்தனமாக பதில் கூறுகிறீர்களே?

இந்த பர்ஸில் பணம் வைக்கலாம் என்று எங்களுக்கு தெரியாதா, என்று கலாய்க்கும் விதமாக பேசியிருக்கிறார் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இவ்ளோ அல்பத்தனமான ஆளா இருக்கீங்களே என மேடையிலேயே கலாய்த்து, சமந்தாவை விளாசிய திவ்யதர்ஷினியால் அந்த இடமே கலகலப்பானது

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam