இவர் மட்டும் இல்லை என்றால் நான் இறந்திருப்பேன்..! – ரகசியம் உடைத்த குத்து ரம்யா..!

நடிகை தி்வ்யா ஸ்பந்தனா,  நடிகர் சிலம்பரசன் நடித்த குத்து படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார் குத்து ரம்யா. தி்வ்யா ஸ்பந்தனா என்பது இவரது உண்மையான பெயராக இருந்தாலும், குத்து படத்தில்  நடித்ததால், குத்து ரம்யா என்றால்தான், பலருக்கும் இவரை தெரியும்.

கன்னடத்தில், அதிக படங்களில் நடித்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் ஜோடியாக, பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் ஆர்வம் கொண்ட ரம்யா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த தேர்தலில் இவர் போட்டியிட்ட போது, வெற்றி கிடைக்கவில்லை.

ராகுல் காந்தி எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர். மதிப்பு மிக்க தலைவர், எனது தாய் தந்தைக்கு அடுத்த நிலையில், தலைவர் ராகுல் காந்தியை வைத்திருக்கிறேன், என்று சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, குத்து ரம்யா பெருமையாக கூறி இருக்கிறார்.

அதே பேட்டியில், மற்றொரு அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.நான் மாண்டியா தொகுதி எம்.பியாாக இருந்த போது, எனது தந்தை இறந்து விட்டார். அவரது மனைவி மிகவும் வேதனைப்படுத்தியது.

அவரது பிரிவை என்னால் தாங்க முடியவில்லை., என் அருகில், இனி அப்பா இல்லாத நிலையில், இந்த வாழ்க்கையை வாழவே வேண்டாம். தற்கொலை செய்து கொள்ள்லாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

அந்த நேரத்தில், எனக்கு தைரியம் கொடுத்தது தலைவர் ராகுல் காந்திதான். அரசியலில் முழுமையாக ஈடுபட்டு, மக்களுக்கு சேவை செய்வதில், உன் முழு கவனத்தையும் செலுத்தினால், அந்த சேவையில் உன் தந்தையை நீ காண முடியும் என்று கூறினார். அதற்கு பிறகுதான்,,தற்கொலை எண்ண்த்தில் இருந்து முழுமையாக விடுபட்டேன்.

சாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு தைரியம் கொடுத்து, என்னை சாவில் இருந்து காப்பாற்றியது தலைவர் ராகுல் காந்திதான் என்று உருக்கமாக தெரிவித்துள்ளாார்.

நடிகையாக மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ள குத்து ரம்யா, கா்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய டிஜிட்டல் அணியின் தலைவராக உள்ளார்.

சினிமாவிலும் சாதித்த வகையில், விருதுகள் பல பெற்றிருக்கிறார். தனனம் தனனம் என்ற படத்தில் நடித்ததற்காக, பிலிம்பேர் விருது, ரம்யாவுக்கு கிடைத்திருக்கிறது.

மொத்தம் 2 பிலிம் பேர் விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளது. கர்நாடகா மாநில அரசின் சினிமா விருது பெற்றுள்ளார். கன்னடத்தில் இவரது முதல் படம் புனீத் ராஜ்குமார் நடித்த அபி. இவருக்கு ரம்யா என்ற பெயரை சூட்டியது பர்வதம்மாள் ராஜ்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …