எனக்கு தான் பாதிப்பு அதிகம்.. முதன் முறையாக விவாகரத்து பற்றி வாயை திறந்த தொகுப்பாளினி DD..!

சினிமா நடிகைகளை போலவே, முன்னணி டிவி சேனல்களில் வரும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று பிரபலமானவர்களாக தான் இருக்கின்றனர்.

அந்த வகையில் சினிமா நடிகைகளை போலவே டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று பிரபலமானவர்களாக தான் இருக்கின்றனர்

DD என்கிற திவ்யதர்ஷினி

அந்த வகையில் DD என்கிற திவ்யதர்ஷினி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு முக்கிய வீடியோ ஜாக்கியாக இருக்கிறார். இவர் டிவி சேனல்களில் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

சினிமா விருது விழாக்கள், முக்கிய சினிமா விழாக்கள், புதிய படங்கள் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழா போன்ற நிகழ்வுகளில் தொகுப்பாளராக பங்கு பெற்று வருகிறார்.

5ம் வகுப்பு படிக்கும் போதே தொகுப்பாளர்

DD என்றாலே கலகலப்பான பேச்சும், துள்ளலான அவரது நடவடிக்கைகளும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமானது, DD ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது சன் டிவியில் சிறுவர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் DD பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறார். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்மார்ட் ஹோம், சூப்பர் சிங்கர் 20, ஜோடி சீசன் 7, காப்பி வித் DD போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

அக்கா பிரியதர்ஷினி

DD யின் அக்கா பிரியதர்ஷினி, அவரும் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர் தான். நடிகையாகவும் இப்போது இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

விவாகரத்து

DD கடந்த 2014 ஆம் ஆண்டில் தனது நீண்ட கால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில், அவரது திருமண வாழ்க்கை கசந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டில் அவர் அவரை பிரிந்து, விவாகரத்து பெற்று விட்டார்.

இப்போது சமீப காலமாக DD சில படங்களில் நடித்து வருகிறார்.

கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து DD வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில் DD கூறியதாவது,

நான் உடல்நல பிரச்சனைகளால் நான் இப்போதும் மிகவும் அவதிப்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். இருப்பினும் நான் சிறப்பாக செயல்படுகிறேன். கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.

முடிவை எடுத்தேன்

எனக்கு நடந்த விவாகரத்துதான், வாழ்க்கையில் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. அந்த நேரத்தில் நான் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று அந்த முடிவை எடுத்தேன்.
எல்லாம் முடிந்து விட்டது

நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களுடன் நேர்காணலுக்கு தயாரான சமயத்தில், எனக்கு விவாகரத்து உறுதியானது என்பது தெரிய வந்தது. அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது என்பதை நான் மனதில் நான் உணர்ந்தேன். உண்மையில் விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட என்னை அதிகமாக பாதித்தது என்று டிடி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

எனக்கு தான் பாதிப்பு அதிகம் என்று முதன் முறையாக விவாகரத்து பற்றி வாயை திறந்து பேசியிருக்கிறார் தொகுப்பாளினி DD என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version