நான் என் புருஷனுக்கு பண்ணது தப்பா..? எதுக்கு மன்னிப்பு கேக்கணும்.. திவ்யதர்ஷினி வலுவான பதிலடி..!

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து, கடந்த 2017 ஆம் ஆண்டில் தனது கணவரை விவாகரத்து செய்தார்.

தனது திருமண வாழ்க்கை, விவாகரத்து குறித்து இதுவரை வெளிப்படையாக பேசாத நிலையில், இப்போது DD பேசத் துவங்கியிருக்கிறார். இப்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

DD என்கிற திவ்யதர்ஷினி

சமீபத்தில் சமூக வலைதளத்தில் DD மீது அபிமானம் கொண்ட ஒரு ரசிகர் உங்களுடைய திருமண விவாகரத்தில் முடிந்து விட்டதா என்பது குறித்து கேள்வி கேட்டுவிட்டு, இது குறித்து நான் கேட்பதற்கு மன்னிக்கவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதுக்கு பதில் அளித்த DD, விவாகரத்து செய்வது என்பது மிகப்பெரிய தவறா, இதற்கு எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று அந்த ரசிகரை திருப்பி கேட்டவர், தொடர்ந்து அதில் தனது திருமண வாழ்க்கை குறித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.

உடல் ரீதியாக பல சிரமங்கள்

நான் ஆரம்பத்தில் இருந்தே உடல் ரீதியாக பல சிரமங்களை அனுபவித்து வருகிறேன். இப்போதும் எனக்கு ஹெல்த் ரீதியாக சில தொந்தரவுகள் இருக்கிறது. அதில் ஒரு தொந்தரவை சரி செய்ய சர்ஜரி செய்ய போய், மறுபடியும் அந்த சர்ஜரியை சரி செய்ய மறுபடியும் இரண்டு, மூன்று முறை சர்ஜரி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் எனக்கு யாருமே பக்கபலமாக இல்லை. அதாவது யார் பக்கபலமாக என்னுடன் இருக்க வேண்டுமோ, அதாவது என் கணவரும் கூட எனக்கு அப்போது ஆதரவாக இல்லை என்பது தான் கசப்பான உண்மை.

நொந்து போய் விட்டேன்

அந்த நேரத்தில் நான் மிகவும் நொந்து போய்விட்டேன். அதன்பிறகுதான் என் வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறிப் போய்விட்டது.

இந்த விவாகரத்து என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் உண்டு பண்ணிவிட்டது. நான் ரம்யா கிருஷ்ணனின் நேர்காணல் செய்யப் போன போது தான் எனக்கு விவாகரத்து என்பது எனக்கு உறுதியாக தெரிந்தது.

அப்போது இருந்து, என் வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர் கொள்ள தயாராகி விட்டேன். வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமென்றால், இந்த விவாகரத்து முக்கியம் என்பது எனக்கு அப்போது தோன்றி விட்டது. அப்போதே அந்த முடிவை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன்.

சந்தோஷமாக இருக்கிறேன்

அதன் பிறகு எப்போதும் நான் சந்தோஷமாகத்தான் இருந்து வருகிறேன். என்னுடைய சந்தோசத்துக்கு இந்த பாதிப்பும் இல்லை. நான் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும் என்னுடைய பணியில் நான் சரியாக இருந்து வருகிறேன்.

என் பணியை சக்சஸ் புல்லாக செய்து வருவதால் நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று அந்த நேர்காணலில் அந்த சமூக வலைதளத்தில் தனது உணர்வுகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை DD என்கிற திவ்யதர்ஷினி

என் புருஷனுக்கு பண்ணது தப்பா?

இதன்மூலம் நான் என் புருஷனுக்கு பண்ணது தப்பா, விவாகரத்து செய்ததற்கு எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று DD திவ்யதர்ஷினி வலுவான பதிலடி தந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version