பத்து நாள் கூட இது இல்லாம தூங்குனது இல்ல.. திவ்யதர்ஷினி கண்ணீர்..

தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக பணியாற்றிய திவ்யதர்ஷினி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் முதுகலை படிப்பை படித்தவர். இவரின் துள்ளலான பேச்சால் பலரும் இவரது நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பார்கள்.

இதையும் படிங்க: கைதி படத்தை மிஸ் பண்ணேன்… ஓகே சொல்லிட்டு கார்த்தி எனக்கு போன் பண்ணி கேட்ட வார்த்தை.. விஜய் சேதுபதி பேச்சு..

திரைப்பட துறையில் இருக்கும் நடிகைகளுக்கு எப்படி ஒரு பான் சர்கிள் இருக்குமோ அது போல இவருக்கு என்று ஒரு பேன் சர்க்கிள் உள்ளது.

திவ்யதர்ஷினி @ டிடி..

விஜய் டிவியில் முக்கியமான தொகுப்பாளினியாக திகழ்த்த இவர் மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருப்பவர். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகள் இவருக்கு மிக நல்ல பிரபலத்தை பெற்று தந்தது.

மேலும் இவர் தொகுத்து வழங்கிய ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் இவருக்கு பெரும் வரவேற்பை தந்ததோடு பல ரசிகர்கள் உருவாக காரணமாக இருந்தது.

பத்து நாள் தூங்காம இருந்தேன்..

விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனினும் சின்ன, சின்ன கேரக்டர் ரோலை திரைப்படத்தில் செய்த இவருக்கு ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் இவருக்கு காலில் வலி ஏற்பட்டு தொடர்ந்து நிற்க முடியாத காரணத்தால் விஜய் டிவியில் பணியாற்ற முடியாமல் போனது. எவ்வளவோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டை எதிர வைத்த டிடி தற்போது வீல் சேரில் அமர்ந்து செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

பத்து வருடங்களாக இந்த நோயின் பாதிப்பில் இருக்கும் டிடி வலி இல்லாமல் தூங்கின நாட்கள் 10 நாட்கள் கூட இருக்காது என்று கூறியிருக்கும் பேச்சானது ரசிகர்களின் மனதில் வலியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு நாளும் வலி வலி என்று அந்த வலியோடு தான் போராட வேண்டி இருந்தது. ஏன் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலியை நீக்க வழி இல்லையா? என்று பல வகைகளில் நான் போராடி இருக்கிறேன் என்று அவர் பேசினார்.

இதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவர் டிராவல் செய்யும் போது வீல் சாரை மட்டும் தான் பயன்படுத்துவதாக கூறுகிறார். இது மட்டுமல்லாமல் சென்னையில் வீல் சேர் பிரிண்ட்லி இல்லை என்பதால் தான் வெளிநாடுகளில் இதை பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

இந்த பேட்டியை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் விரைவில் டிடி இந்த கடுமையான நோயிலிருந்து வெளி வருவதற்கு ஆண்டவனை வேண்டுவதாக கூறி வருகிறார்கள். இவ்வளவு சிரமத்திலும் மனம் தளராமல் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை பார்த்து ரசிகர்களும் ஊக்கத்தோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version