கணவரை விவாகரத்து செய்த பின் கர்ப்பமாகியுள்ள திவ்யதர்ஷினி..? தீயாய் பரவும் புகைப்படம்..!

சின்னத்திரை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளர்களில் முக்கியமானவர் திவ்யதர்ஷினி. டிடி என்று எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி சிறு வயது முதலே விஜய் டிவியில் பங்கு பெற்று வருகிறார்.

ஒரு தொகுப்பாளினியாக வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் திவ்யதர்ஷினி. விஜய் டிவி மூலமாக பலர் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்து உச்சத்தை தொட்டு இருக்கின்றனர். நடிகர் சந்தானம் சிவகார்த்திகேயன் போன்ற பலரும் விஜய் டிவியின் மூலமாகதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள்.

ஆனால் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக விஜய் டிவியில் அறிமுகமாகி பிரபலமாவதற்கு முன்பிருந்த விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வருபவர்தான் திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினி முக்கிய நபராக தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்கிற ஒரு நிகழ்ச்சி வெகு காலமாக விஜய் டிவியில் நடத்தப்பட்டது.

திவ்யதர்ஷினிக்கு கிடைத்த வரவேற்பு:

தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குனர்கள் நடிகர்களை பேட்டி எடுப்பதுதான் அந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவ்வளவு சிறிய வயதிலேயே அவ்வளவு பெரிய இயக்குனர்களையும் நடிகர்களையும் அசால்டாக பேட்டி எடுத்திருப்பார் திவ்யதர்ஷினி.

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் இப்போதும் நீங்கா இடத்தை திவ்யதர்ஷினி பிடித்திருக்கிறார் என்று கூறலாம். இப்பொழுது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அவ்வளவாக திவ்யதர்ஷினியை பார்க்க முடியவில்லை.

சமீபத்தில் அவருக்கு ஒரு விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்கு பிறகு அதிக நேரம் ஒரே இடத்தில் நிற்பது என்பதே அவருக்கு கடினமான விஷயமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை இப்போது திவ்யதர்ஷினி செய்வதில்லை.

ட்ரெண்டான போட்டோ:

ஆனால் அவருக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக சினிமாவில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் ஏதாவது ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் திருமண வாழ்க்கையை பொறுத்தவரை திவ்யதர்ஷினிக்கு அவ்வளவு சுமுகமாக திருமண வாழ்க்கை அமையவில்லை. திருமணமாகி சில வருடங்களிலேயே திவ்யதர்ஷினிக்கு விவாகரத்து உண்டானது.

அவருடைய கணவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இது நடந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் தனியாகதான் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி. மீண்டும் இவர் திருமணம் செய்வாரா? என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதற்கு நடுவே இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அது அதிக வைரலானது விவாகரத்தாகி இத்தனை வருடங்கள் கழித்து திடீரென எப்படி திவ்யதர்ஷினி இப்படி கர்ப்பமாகி இருக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டு போய் உள்ளனர்.

ஆனால் இது சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காப்பி வித் காதல் என்கிற திரைப்படத்தில் உள்ள திவ்யதர்ஷினி கெட்டப் என்பது பிறகுதான் தெரிந்தது அந்த புகைப்படம் தாமதமாக டிரெண்டாகி வருவதால் அதை பார்க்கும் பலரும் திவ்யதர்ஷினி கர்ப்பமாக இருப்பதாக நினைத்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version