3 மடங்கு சொத்தை ஆட்டைய போடத்தான் இது நடந்ததா? – வெளிவந்த ஜெயம் ரவி-யின் Real Face..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் விவாகரத்துக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சினிமா துறையில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த பலரும் அண்மைக்காலமாக அதிக அளவு விவாகரத்துகள் செய்து வருகிறார்கள். இதற்குக் காரணம் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பதா? என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.

அண்மையில் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவரது அன்பு காதல் மனைவி சைந்தவியை பிரிந்து விவாகரத்து பெற போவதாக அறிவித்து விவாகரத்தை செய்திருந்தார்கள். இந்த விஷயமே இன்னும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காததை அடுத்து தற்போது ஜெயம் ரவியின் விவகாரம் மேலும் அதிர்ச்சியை தந்துள்ளது.

ஜெயம் ரவி ஆர்த்தி..

ஜெயம் ரவி அடிப்படையில் சினிமா பின்புலத்தை கொண்டு இருந்தாலும் இவர் வளர்ந்த பிறகு தன் அண்ணன் டைரக்ஷன் செய்த ஜெயம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பல படங்களில் நடித்திருக்க கூடிய இவர் பிற இயக்குனர்களின் படங்களில் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை என்றாலும் சில படங்களில் தனது அபார நடிப்பு திறனை வெளிப்படுத்தியதோடு தனி ஒருவன் படத்தில் தனது அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் நடிகர் ஜெயம் ரவி கல்லூரி விழா ஒன்றில் ஆர்த்தியை சந்தித்ததை அடுத்து அவர் மீது காதல் கொண்டு இருக்கிறார்.இந்நிலையில் ஆர்த்தி வெளிநாடு சென்று படித்து திரும்பிய பிறகு இருவரும் ஒன்றாக சந்தித்து பல நாட்கள் டேட்டிங் சென்றிருக்கக் கூடிய விஷயங்கள் தற்போது இணையங்களில் கசிந்து வருகிறது.

ஜெயம் ரவியை விட மூன்று மடங்கு சொத்து..

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி வைத்திருக்கும் சொத்தை விட ஆர்த்திக்கு மூன்று மடங்கு அளவு சொத்துக்கள் இருக்கும் கோடீஸ்வரராக திகழ்கிறார். இவருடைய அம்மா சுஜாதா விஜயகுமார் ஆர்த்தியின் ஆசைக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஜெயம் ரவியோடு திருமணம் செய்து வைத்தார்.

ஆர்த்தி அம்மா வேறு யாரும் இல்லை சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள் மற்றும் ஏராளமான சீரியல்களை சன் டிவியில் தயாரித்து இருக்கிறார். இந்நிலையில் ஜெயம் ரவியை வைத்து சில படங்களை தயாரித்து அது நஷ்டத்தில் முடிந்ததை அடுத்து கருத்து வேற்றுமைகள் வர ஆரம்பித்து உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருக்கக்கூடிய விஷயங்கள் இணையத்தில் கசிந்த போதும் அது பற்றி பெரிதாக எந்தவித எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தாமல் இருந்தார்கள்.

இந்நிலையில் தனது அதிகாரப்பூர்வமான விவாகரத்து குறித்த தகவல்களை ஜெயம் ரவி இணையங்களில் வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது.

மேலும் ஆர்த்தியின் குடிப்பழக்கம், ஈகோ, பல மடங்கு சொத்து போன்றவை தான் இந்த பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்ற ரீதியில் பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சொத்துக்காக தான் ஜெயம் ரவி ஆசைப்பட்டு ஆர்த்தியை காதலித்து கல்யாணம் பண்ணி இருப்பாரோ? என்ற ரீதியில் சிலர் பேசி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனினும் இதன் உண்மை என்ன என்பது தெரியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version