செங்கல்பட்டு அருகே பழம்த்தூர் பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இருக்கிறார்கள் .
இதில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கோர விபத்தில் தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்றும் ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து என அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதிக் கொண்டு பெரும் விபத்துக்குள்ளானது.
செங்கல்பட்டு டோல்கேட் விபத்து:
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.
இச்சம்பவம் பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.
மேலும், இவர்களுள் 20-கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. இந்த கோர விபத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டு பலியானவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களின் உடல் கூர் ஆய்வு செய்யப்பட்டு. செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து எப்படி நேரிட்டது குறித்த தகவல் தற்போது வெளியாகி அதிர வைத்துள்ளது.
அதாவது முதலில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த பேருந்தின் மீது வேகமாக மோதி இருக்கிறது .
4 பேர் சம்பவ இடத்திலே பலி:
அதற்கு அடுத்து ஆம்னி பேருந்தின் மீது லாரி மோதியதில் சொகுசு பேருந்து மீது சாதாரண பேருந்து பின்பக்கமாக மோதி இருக்கிறது.
இதை அடுத்து முன்பக்கம் லாரியும் பின்பக்கம் சாதாரண அரசு பேருந்தும் அடுத்தடுத்து ஆம்னி பேருந்தை பலமாக மோதியதில் அப்பேருந்தில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .
இதில் திருச்சியை சேர்ந்த மருத்துவர் ராஜேஷ் மற்றும் அவரது சித்தி மேலும் பிரவீன் என்ற மற்றொருவர். என்ன மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர் . இதில் மற்றொருவர் ஆள் அடையாளமே இன்னும் காண முடியாத அளவுக்கு கோரமரணம் அடைந்து இருக்கிறார்.
இச்சம்பவம் இது பெரிய பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
விபத்துக்கான காரணம்:
அதாவது, போதிய இடைவேளை இன்றி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ரயில் போல வந்தது தான் இந்த கோரமான விபத்துக்கு காரணம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் பொழுது குறிப்பிட்ட இடைவெளியை உறுதிப்படுத்த வேண்டும் குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளியிலாவது ஒரு வாகனத்தை பின் தொடர வேண்டும்.
ஆனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அவசரம் காரணமாக முன்னாள் செல்லும் வாகனத்தை ஒட்டியபடியே பல வாகனங்கள் பின் தொடர்ந்து செல்வதை பார்க்க முடிகிறது.
அப்படி சென்றால் உங்கள் வாகனம் எளிதில் விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வாகனம் ஓட்டும்போது கவனம்:
முன்னே செல்லும் வாகனம் ஏதாவது ஒரு தடங்கல் காரணமாக திடீரென வேகத்தை குறைத்தாலோ.. பிரேக் அடிக்க நேர்ந்தாலோ.. அதனை அவதானித்து உங்களுடைய வாகனத்தில் பிரேக் அடிப்பதற்கு சிறு அவகாசம் தேவை.
நீங்கள் 10 மீட்டர் இடைவெளியில் வாகனத்தை பின் தொடர்ந்தால் அந்த அவகாசத்தை பெற முடியும். ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கமாக பின் தொடரும் பொழுது முன் செல்லும் வாகனம் விபத்திற்கு உள்ளானால் பின்னே தொடர்ந்து செல்லும் வாகனமும் விபத்தில் சிக்க வேண்டியது கட்டாயமாகிவிடும்.
எனவே சாலையில் பயணிக்கும் பொழுது குறைந்தபட்சம் ஒரு 10 மீட்டர் இடைவெளியிலாவது முன்னே செல்லும் வாகனத்தை பின் தொடர பழகுங்கள் என்று கூறுகிறார்கள்.