இந்திய சினிமாவில் நட்சத்திர நாயகியாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் பாலிவுட்டில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி.
இவர் கிட்டத்தட்ட. 60களில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து 70களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த வந்தார் .
அதன் பிறகு 80களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு கடைசியாக கொஞ்சம் மரியாதைக்குரிய கௌரவ வேடத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.
நடிகை ஸ்ரீதேவி:
முதல் முதலில் 1969 ஆம் ஆண்டு துணைவன் என்கிற திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரம் நேற்று நடித்த ஸ்ரீதேவிக்கு ஒரு நல்ல அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது.
அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பு பலரும் பாராட்டப்பட்டிருந்தது. ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார்.
1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ஆரம்பத்திலேயே கமல்ஹாசன் ரஜினிகாந்த் என பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மாபெரும் வெற்றி படங்களை ஸ்ரீதேவி கொடுத்திருக்கிறார்.
நல்ல பவ்யமான தோற்றம், குழந்தை போன்ற பேச்சு, வெகுளித்தனமான நடிப்பு என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
உயரிய விருதுகள்:
இவர் தமிழை தவிர்த்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மொழி டப்பல் வேறு மொழி படங்களில் நடித்த பல விருதுகளையும் அள்ளி இருக்கிறார்.
இதுவரை கிட்டத்தட்ட300கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் 300 வது படமாகும்.
சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது, ஆந்திர மாநில அரசு விருது , கேரளா அரசு விருது உள்ளிவற்றை வென்றுள்ளார்.
மேலும் இந்தியாவின் உயரிய விருதுகள் ஒன்றாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதினை நடிகை ஸ்ரீதேவி கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்றிருந்தார்.
தமிழில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஸ்ரீதேவிக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததால் அங்கு சென்று பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தனக்கு மிகுந்த பாதுகாப்பாகவும் அரவணைப்பாகவும் பல்வேறு உதவிகளை செய்து வந்ததால் அவர் மீது காதலில் விழுந்துள்ளார்.
மாரடைப்பால் மரணம்:
பின்னர் இருவரும் 1996ல் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களுக்கு ஜான்விக், குஷி என இரண்டு மகள்கள் பிறந்தநாள்.
அதன் பின்னர் பாலிவுட்டில் செட்டில் ஆகி அங்கேயே பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி. கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவர் போனி கபூரின் சகோதரியின் மகன் மோகித் வர்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி துபாய்க்கு சென்று இருக்கிறார்.
அப்போது மூத்த மகள் ஜான்விகப்பூருக்கு ஷூட்டிங் இருந்ததால் அவரை விட்டுவிட்டு இளைய மகள் குஷி மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார்.
அந்த கல்யாணத்துக்கு வந்திருந்த கணவர் போனி கபூர் திருமணம் முடிந்த கையோடு மும்பைக்கு திரும்பி வந்துவிட்டார்.
கடைசி 15 நிமிடம்:
பின்னர் மீண்டும் துபாய்க்கு மனைவி ஸ்ரீதேவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சென்றுள்ளார். ஸ்ரீதேவி தங்கி இருக்கும் ஹோட்டல் அறையை கிட்டத்தட்ட மாலை 5:30 மணி அளவில் சென்றடைந்துள்ளார்.
போனி கபூர் அங்கு அவருடன் 15 நிமிடம் வரை பேசி இருக்கிறார். பின்னர் டின்னருக்கு வெளியே செல்லலாம் என நான் தயாராகி விட்டு வருகிறேன் என கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார் ஸ்ரீதேவி.
நெடுநேரம் ஆகியும் வெளியில் வராததால் பாத்ரூம் திறந்து பார்த்தபோது குளியல் தொட்டியில் மாரடைப்பு வந்து இறந்து போனதை போனி கபூர் பார்த்து அதிர்ச்சி அடைந்து போனார்.
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க துபாய்க்கு சென்று அங்கே பேசிய அந்த கடைசி 15 நிமிடம்தான் போனி கபூர் வாழ்க்கையில் மறக்கமுடியாத கடைசி 15 நிமிடம் என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.