தமிழக வெற்றிக்கழகம்… திரிஷாவிற்கு என்ன பொறுப்பு தெரியுமா..? இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் ஆன விஜய் தற்போது அரசியல் களத்தில் இறங்கி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாக அரசியலில் தான் ஈடுபட போவதாக அறிவித்ததில் இருந்தே சமூக நலன் சார்ந்த பல விஷயங்களிலும் மக்களுக்கு பல நல திட்ட உதவிகளையும் தனது ரசிகர்கள் மன்றத்தின் மூலம் செய்து வருகிறார்.

அரசியலில் நடிகர் விஜய்:

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கு வெளியில் தெரியாமல் மறைமுகமாக பல உதவிகளை செய்து வரும் விஜய் தொலைபேசியில் அழைத்து விஷயத்தை கேட்டு அறிந்தார் .

சமீபத்தில் கூட கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்கள் பற்றி அனுதாபம் தெரிவிக்க நேரடியாக களத்திற்கு சென்றுவிட்டார் .

இப்படியாக அரசியலில் முழு வீச்சில் இறங்கி மக்கள் மீது மிகுந்த கவனத்தை செலுத்து வருகிறார் தளபதி விஜய்.

முன்னதாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்தி நேரில் சென்று விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தார்.

இது இவரது மிகப்பெரிய அரசியல் தளமாகவும் அரசியலின் அடித்தளமாகவும் அமைந்தது. கட்சியை துவங்குவதற்கு முன்னதாகவே மாஸான இது போன்ற செயல்கள் விஜய்யை மக்களால் கொண்டாட வைத்தது.

விஜய்யின் கட்சியில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு:

“தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் என புதிய கட்சியை துவங்கி உள்ள விஜய் கடந்த 2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக கோட் மற்றும் மற்றொரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அத்தோடு சினிமாவுக்கு அவருக்கு டாட்டா காட்ட இருக்கிறார்.

இப்படியான சமயத்தில் நடிகை திரிஷாவுக்கு விஜய்யின் கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நடிகர் திரிஷாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் மாநாட்டில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள இருக்கும் நடிகர் திரிஷாவுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகிறது.

அதுமட்டுமின்றி முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராகவும் போட்டியிட இருக்கிறார் நடிகை திரிஷா என்ற தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகர் விஜயுடன் நடிகர் திரிஷா நெருக்கமாக இருக்கிறார் என்றெல்லாம் கண்காது மூக்கு வைத்து தகவல்கள் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

TVK கொள்கை பரப்பு செயலாளராக திரிஷா

தற்பொழுது தமிழக தமிழக வெற்றிக்கழத்தின் முக்கியமான பொறுப்பில் சேர இருக்கிறார் நடிகை திரிஷா என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பிலோ அல்லது நடிகர் விஜய் தரப்பிலிருந்தோ எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை.

என்றாலும் கூட, இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றது. நடிகை திரிஷா தமிழக வெற்றி கழகத்தில் கொள்கை பரப்பு செயலாளராக இருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாகவே இருக்கும் என்று பலரும் யூகிக்கிறார்கள்.

அதே சமயம் இது எதிர்மறையாக வேலை செய்யும் கூட வாய்ப்பு இருக்கிறது என சிலர் ஆருடம் கூறுபவர்களும் இருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version