சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருபவர்தான் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவிற்கு மூத்த மகளாக பிறந்தவர்தான் வனிதா.
நடிகை வனிதா விஜயகுமார்:
1995 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமானார்.
தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெரிதாக அவருக்கு பெயர் சொல்லும்படியோ பிரபலமாகும் படியோ எந்த ஒரு படமும் அவருக்கு அமையவில்லை.
இதை அடுத்து. வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இடையே பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு மீண்டும் ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரையும் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார்.
அதன் பிறகு தன்னுடைய அப்பாவுடன் சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாக நடிகையாக பேசப்பட்டார்.
சொத்து தகராறு:
குறிப்பாக தனது அப்பாவும் நடிகரும் ஆன விஜயகுமாரை ரோட்டில் இழுத்து அடித்து, தகாத வார்த்தைகளால் திட்டியது முகம் சுளிக்க வைத்தது.
இதனால் அந்த குடும்பத்திலிருந்து வனிதாவை பிரித்து விட்டார்கள். தற்போது வனிதா தனிமையில் தனது மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு விஜய் ஸ்ரீ ஹரி, ஜோவிகா, ஜெயந்திக்கா என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விஜய் ஸ்ரீ ஹரி தனது தாத்தாவான விஜயகுமாருடன் தான் வளர்ந்து வருகிறார்.
இதில் அவரது மகள் ஜோவிகாவுக்கு பெரிதாக படிப்பில் ஆர்வம் இல்லாததால் வனிதாவின் சிபாரிசு உடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
ஜோவிகா அறிமுகம்:
அதன் நிகழ்ச்சியில் பெரிதாக எதுவும் சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும் கூட ஜோவிகா சக போட்டியாளர்கள் யாருக்குமே மரியாதை கொடுக்கவில்லை என்ற அவ பெயரோடு அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
பின்னர் விதவிதமான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பட வாய்ப்பு தேடி வந்த ஜோவிக்காவிற்கு பிரபல இயக்குனரான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் டீன்ஸ் திரைப்படத்தில் நடிகையாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
வனிதாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் மீண்டும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மிகவும் போல்டான தைரியமான அவரின் பேச்சின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனிடையே பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். வயது பெண்கள் இருக்கும்போது வனிதாவின் இந்த திருமணம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாக பேசப்பட்டது.
அதன் பின்னர் பீட்டர் பால் குடிபோதையால் மரணித்து விட்டார். தற்பொழுது youtube களில் வீடியோ வெளியிடுவது சொந்தமாக பிசினஸ் என வனிதா மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
4-காவது நபருடன் காதல்?
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த வனிதாவிடம் நெட்டிசன்ஸ் ஒருவர். இப்போது யாரோடாவாது ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்களா என கேட்டதற்கு….
வனிதா ஆம் நான் உங்கள் அனைவருடனும் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறேன் என நச்சுனு ஒரு பதில் கொடுத்தார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது குறிப்பிடத்தக்கது.