ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா..? பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..

நடன கலைஞராக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் பேய் படங்களுக்கு பெயர் போன நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இவர் முதன்முதலில் டான்சராக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், நடன அமைப்பாளர் என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஒரு அஞ்சு நிமிஷம் வச்சிக்குவேன்.. அவங்க அம்மா கேட்ட கூட விட மாட்டேன்.. ஷகீலா ஓப்பன் டாக்..!

ஜென்டில்மேன் படத்தில் குரூப் டான்சராக ஆக அறிமுகமாகி அதன் பிறகு அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், உன்னை கொடு என்னைத் தருவேன்.

பார்த்தாலே பரவசம், வருஷமெல்லாம் வசந்தம், அற்புதம், பாபா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடனமாடியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்:

இதுதவிர சில படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார் அதன் பின்னர் முனி படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் தொடர்ந்து இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் முனி , காஞ்சனா , காஞ்சனா 2, உள்ளிட்ட பல்வேறு பேய் படங்களாகவே தேர்ந்தெடுத்து இயக்கி அதில் தானே நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்று வந்தார்.

இதையும் படியுங்கள்: விஜய் படத்தில் நடித்த குழந்தைகள் அன்றும் இன்றும்..

நடிகர் ராகவா லாரன்ஸ் திருமுல்லைவாயில் பிருந்தாவனம் கோயிலை கட்டினார். தனது அம்மாவின் மீது அதிக பாசம் வைத்துள்ள லாரன்ஸ் உலகத்திலேயே விலையுயர்ந்த கார்களை கொண்டு சிலை ஒன்றையும் வடிவமைத்தார்.

இதனிடையே ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கும், பல மாற்றுத்திறனாளிகளுக்கும் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து அவர்களின் திறமையை ஊக்குவித்து வருகிறார்.

இதுவரை 136 குழந்தைகளுக்கு ஹார்ட் சர்ஜரி செய்வதற்கு தேவையான பண உதவிகளை செய்து அவர்களுக்கு மறு உயிர் கொடுத்துள்ளார்.

மேலும் சுமார் 60 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேவையான பண உதவிகளையும் செய்திருக்கிறார். இதனிடையே ராகவா லாரன்ஸின் மனைவி லதா அவரது அறக்கட்டளையை கவனித்துக்கொள்கிறார்.

ராகவா லாரன்ஸ் மனைவி பெயர் லதா. இவர் ஒரு சமூக ஆர்வலர். இதுமட்டும்மில்லாமல் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை மனைவி லதா செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: “சித்தா” படத்தில் அம்மாஞ்சியாக நடித்த நடிகையா இது..? மூச்சு முட்டும் கிளாமர் போஸ்..!

ராகவா லாரன்ஸ் மனைவி யாரு தெரியுமா?

இதனிடையே ராகவா லாரன்ஸ் திரைப்படங்களுக்கு அவரது மனைவி பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அவர் பல ஆலோசனைகளையும் கொடுப்பார்.

ராகவா லாரன்ஸ் தன்னுடைய படங்களை வெளியிடுவதற்கு முன்னர் தன் மனைவிடம் ஆலோசித்த பிறகு படங்களை வெளியிடுவாராம்.

அத்துடன் பல சோசியல் வர்க்கையும் செய்து கொண்டே தனது கணவரின் செயல்களையும் அவர்கள் செய்யும் பல்வேறு உதவிகளுக்கும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை அவரது மகள் தான் நடத்த இருக்கிறார் என கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version