Beautician to நடிகை.. Divorce கொடுத்த போலீஸ் கணவர்.. சிறகடிக்க ஆசை மீனா அம்மா யார் தெரியுமா..?

சீரியல் நடிகையான தமிழ்ச்செல்வி பல்வேறு சீரியல்களின் முக்கியமான ரோல்களில் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

குறிப்பாக இல்லத்தரசிகளின் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் மகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ச்செல்வியின் வாழ்க்கை வரலாறு என்று எடுத்துக் கொண்டால் இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் இவரோட திருமணமே ஒரு ரொம்ப சுவாரஸ்யமான நடந்து இருக்கு.

சீரியல் நடிகையான தமிழ்ச்செல்வி:

ஆம், கிட்டத்தட்ட ரோஜா படத்தின் ரேஞ்சுக்கு தான் நடந்துள்ளது. அக்காவை பெண் பார்க்க வந்துட்டு தங்கையை திருமணம் செய்து கொண்டு சென்றாராம் அவரது கணவர்.

1996 ஆம் ஆண்டு தான் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது குடும்பத்தில் இருக்கும் மாமா அக்கா எல்லோரும் போலீஸ் என்பதால் இவரை பெண் வந்தவரும் ஒரு போலீஸ் தான்.

இதையும் படியுங்கள்: விஜய் எதுக்கு அப்படி செய்யணும்.. சத்தியமா இப்படி பண்ணுவார்ன்னு நான் நெனைக்கல.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

அக்காவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை அக்காவின் ஜாதகம் பொருத்தமாக இல்லாததால் உடனே தங்கையான தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டாராம்.

ஆரம்பத்தில் பிடிக்காமல் நாங்கள் திருமணம் செய்து கொண்டாலும் எங்களுக்குள் இருக்கும் காதல் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்கிறார் தமிழ்செல்வி.

இவங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள். முதலில் பியூட்டி பார்லரில் பியூட்டிஷனா தனது தொழிலை செய்து வந்த தமிழ்செல்வி அதன் பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க,

அதன் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவருக்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று கேட்டீங்கன்னா இயக்குனர் விஷ்ணுவர்தனின் நெருங்கிய சகோதரி ஒருவர்..

தமிழ்செல்வி நடத்திவந்த பியூட்டி பார்லருக்கு அடிக்கடி செல்வது வழக்கமாம். அப்படித்தான் அவர்கள் மூலமாக தான் சின்னத்திரை தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

விவகாரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர்:

தமிழ் செல்பி சீரியலில் நடிக்க சென்றது அவரது கணவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லையாம் இதனால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: பெட்ரூமில் வெறும் உள்ளாடையுடன் நடிகை நிஷா கணேஷ்.. எசகு பிசகான போஸ்.. கிறுகிறுத்து கிடக்கும் ஃபேன்ஸ்..!

வீட்டில் ஒருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும்போது தபால்காரர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் வர அதை பார்த்து பதறிப் போனாராம் தமிழ் செல்வி.

அதன்பின் கணவரை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்தி அவரது பர்மிஷன் உடன் சினிமாவில் நடிக்க சென்றுள்ளார்.

முதல் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் பேய் சீரியல் ஒன்றில் நடித்து அறிமுகமாக இருக்கிறார். சட்டப்படி குற்றம் திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

அத்துடன் கார்த்தி நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்திலும் இவர் முக்கிய ரோல் ஒன்றில் நடித்திருக்கிறார்.

அந்த படத்தில் கேத்தரின் தெரசாவின் அம்மாவாக தமிழ் செல்வி நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்களான அஜித் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட ஒரு படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தும் இவரது கதாபாத்திரம் அழுத்தமானதாக இருந்தது இல்லை.

பெரும் புகழ் கொடுத்த சிறகடிக்க ஆசை:

விஜய்யின் ஜில்லா படத்தில் கூட ஒரு குழந்தைக்கு ஆக்சிடெண்ட் ஆகிடும் அந்த குழந்தையின் அம்மாவாக இவர் நடித்திருப்பார். அது மிகச் சிறந்த ரோல் என்றாலும் கூட அழுத்தமானதாக பதியவில்லை .

இதையும் படியுங்கள்: ஓ.. இது தான் சரக்கு கப்பலா.. கையில் சரக்குடன் மிதக்கும் பிரியா பவானி ஷங்கர்.. வைரல் பிக்ஸ்..!

ஆனால் ஒரு சீரியலின் மூலமாக தான் இவர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அது தான் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த மௌனராகம் சீரியல் .

குடும்பத்தினர் எதிர்ப்புகளை மீறி சினிமா, சீரியல் என தொடர்ந்து தனது இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த தமிழ் செல்வி…

தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ஒட்டு மொத்த இல்லத்தரசிகளின் மனதையும் கவர்ந்து விட்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam