நடிகை மனோரமாவிற்கு துரோகம் செய்து கழட்டி விட்ட உண்மையான புருஷன் யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகையான மனோரமா நகைச்சுவை கதாபாத்திரத்தில் திறமையை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

1950 களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணத்தில் இதுவரை 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களால் ஆட்சி என அன்போடு அழைக்கப்படுகிறார் நடிகை மனோரமா.

நடிகை மனோரமா:

இவர் ஆரம்ப காலத்தில் வறுமை மற்றும் பல குடும்ப பிரச்சனை காரணமாக மனோரமா தனது தாயாருடன் சேர்ந்து மன்னார்குடிக்கு அருகில் உள்ள கள்ளத்தூர் என்ற இடத்தில் வாடகை வீட்டில் குடி பெயர்ந்தார் .

தன்னுடைய பள்ளி படிப்பை கள்ளத்தூரில் ஒரு ஆரம்ப பள்ளியில் தொடங்கிய மனோரமா சின்ன வயதில் இருந்தே பாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் தன்னுடைய அம்மாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே முடித்துவிட்டு பண்ணையார் வீட்டில் குழந்தை பார்த்துக் கொள்ளும் ஒரு வேலையில் சேர்ந்தார்.

அவரது ஊரில் “அந்தமான் காதலி” என்ற நாடகத்தை நடத்தினார்கள். அதில் பெண் வேடம் போட்ட ஒரு நபருக்கு சரியாக பாட வராததால் மனோரமாவை அந்த சமயத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

அந்த நாடகத்தில் இவரது பாடலும் குரலையும் கேட்டு மெய்சிலிர்த்து போன மக்கள் எல்லோரும் அவரது நடனத்தை பார்த்து வியந்து போனார்கள்.

நாடக ராணியாக மனோரம்மா:

மேலும் அந்த இடத்திலேயே இவரை வெகுவாக பாராட்டி அவருக்கு அன்பு பரிசுகளையும் கொடுத்தார்கள்.

அப்போது இந்த நாடகத்தில் பணியாற்றி இயக்குனர் சுப்ரமணியன், ஹார்மோனியம் வாசித்த தியாகராஜன் உள்ளிட்டோர் அவரது பெயரை மனோரமா என்று மாற்றினார்கள் .

அப்போதுதான் அவரது பெயர் மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த மனோரமா நாடக உலகின் ராணியாக புகழ்பெற்றார்.

இவர் வைரம் நாடக சார்பில் நடித்துக் கொண்டிருந்தபோது சென்னையில் சில நாடகங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்தது.

அப்போதுதான் ஜானகிரானம் ஜானகிராமன் என்பவர் நடிகை மனோரமாவை தேடி வந்து இன்ப வாழ்வு என்ற திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒப்பந்தம் செய்யப் போவதாகவும் கூறினார்.

பிறகு அந்த படம் பாதியிலே நின்று போனதால் கவிஞர் கண்ணதாசனின் ஊமையின் கோட்டை என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த படமும் ஆரம்பத்தில் நின்று போகவே மிகவும் மனமடைந்து போன நடிகை மனோரமா தொடர்ந்து வாய்ப்புகள் தேடி வந்தார்.

அதன்பிறகு மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகையாக சிறிய வேடம் கொடுக்கப்பட்டது.

அதில் சிறப்பாக நடித்த மனோரமா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்து வந்தார் .

நடிகை மனோரமா மாலையிட்ட மங்கை, களத்தூர் கண்ணம்மா, குமரி , பாலும் பழமும், பார் மகளே. திருவிளையாடல் அன்பே மகளே. மோகனாம்பாள். சரஸ்வதி சபதம் இப்படி தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஏமாற்றி திருமணம் செய்த கணவர்:

நடிகை மனோரமா சபா நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்த போது அந்த நாடக குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த எஸ் எம். ராமநாதன் என்பவரை நடிகை மனோரமா காதலித்தார்.

இதன் பிறகு உடனடியாக எஸ்எம் ராமநாதனின் காதலை ஏற்றுக் கொண்ட மனோரமா திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். சினிமா உலகில் நகைச்சுவை என்றால் நடிகர் மட்டும்தான் என்ற ஒரு வரையறையை மாற்றி நடிகைகளாலும் மிகச்சிறப்பான முறையில் காமெடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் மனோரமா.

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்த நடிகை மனோரமா சாகும் சமயத்தில் ஒரு அனாதை போன்றே இறந்து போனார் என்று சொல்லலாம்.

கடைசி காலகட்டத்தில் கணவரால் கைவிடப்பட்ட பிள்ளைகளால் கைவிடப்பட்ட மிகவும் தனிமையிலே வேதனையில் வாழ்ந்து வந்தார் மனோரமா.

மேலும் அவர் தன்னுடைய கடைசி காலகட்டத்தில் திரைத்துறையை சேர்ந்த யாரும் தன்னை வந்து பார்க்கவே இல்லை நலன் விசாரிக்கவே இல்லை என மிகுந்த வேதனையோடு கூறி இருந்தார்.

சுற்றி பல நடிகர் நடிகைகள் இருந்தாலும் நான் அனாதையாக இருப்பது போல் உணர்கிறேன் என நடிகை மனோரமா மிகுந்த வேதனையோடு கடைசி காலத்தில் பேசியிருந்தார்.

நடிகை மனோரமாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய துரோகம் செய்ததை அவருடைய கணவர் தானாம்.

தன்னுடைய கணவர் தன்னை காதலித்து மிகவும் உண்மையாக நேசித்தார் என்று நம்பிய மனோரமாவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

காதல் என்ற பெயரில் துரோகம் செய்த கணவர்:

அதாவது மனோரமா அந்த நாடகத்தில் நடித்தால் அந்த நாடகம் சிறப்பாக போகிறது மக்களின் கவனத்தைக் கவருகிறது.

இதனால் நாடக குழுவுக்கு வருமானமும் அதிகமாக கிடைக்கிறது என்பதால் தான் மனோரமாவை காதலிப்பது போல் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாராம்.

திருமணம் செய்து கொண்ட மனோரமாவுக்கு உடனடியாக ஒரு மகன் பிறந்துவிட்ட சமயத்தில் மகன் பிறந்து ஒரு மாதத்திலேயே தன்னுடைய கணவர் தன்னை வந்து நாடகத்தில் நடிக்கும்படி அழைத்தார் .

இதனால் கோபப்பட்ட மனோரமா ஒரு மாதம் தான் ஆகிறது.பச்சை பிள்ளையை போட்டுட்டு நான் எப்படி நாடகத்துக்கு நடிக்க வர முடியும் என்று கணவரிடம் கோபப்பட்டாராம்.

உடனடியாக கோபித்துக் கொண்டு அவரது கணவர் நாடக குழுவிற்கு சென்று விட்டாராம். பின்னர் பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் மீண்டும் தன்னுடைய கணவர் வந்து தன்னை சந்திப்பார் என காத்திருந்த நடிகை மனோரமாவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

கடைசி வரை தன்னையோ தன் பிள்ளையோ தன்னுடைய கணவர் வந்து பார்க்கவே இல்லை என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டார்.

எனவே நாடகத்தில் நடிப்பதற்காக தான் தன்னை ஏமாற்றி காதலிப்பது போல் பொய் கூறி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று நினைத்து நினைத்து மனோரமா வேதனை அடைந்தாராம்.

இப்படி தன்னுடைய கணவர்….பிள்ளைகள்.. கூட நடித்த நடிகர் நடிகர்கள் என எல்லோரையும் நம்பி ஏமாந்துப் போனாராம்.

கடைசியில் ஏமாற்றப்பட்ட நடிகை மனோரமா கடைசி காலத்தில் இறந்த போது அனாதையாக யாரும் இல்லாமல் தனிமையில் இருந்து மிகவும் கொடுமையான மரணத்தை தழுவினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version