தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் கேரக்டரில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா..?

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வரலாற்று அதிரடி நாடக திரைப்படமாக வெளிவந்திருக்கும் படம் தான் தங்கலான்.

இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தங்கலான் திரைப்படம்:

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் நேற்று இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது தங்க சுரக்கத்திற்காக ஆங்கிலேயர்கள் நிலத்தை கைப்பற்ற திட்டமிட்ட சமயத்தில் அவர்களை எதிர்த்த பழங்குடியின தலைவரான தங்கலானின் துணிச்சலான போராட்டத்தை பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் விக்ரமின் உழைப்பு கடுமையாக இருந்ததாலும் அவரின் வித்யாசமான தோற்றத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை ரசிகர்களுக்கு தூண்டியது.

தங்கலான் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.13 கோடி அளவுக்கு வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

முதல் நாள் வசூல்:

இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.11 கோடிக்கு மேலும் ஆந்திரா மற்றும் கேரளா தெலுங்கானாவில் சேர்த்து கிட்டத்தட்ட இரண்டு கோடிகள் என முதல் நாளில் மட்டும் ரூ. 13 கோடிகள் தங்கலாம் திரைப்படம் வசூலித்து மாபெரும் சாதனை ஈட்டியுள்ளது.

இப்படியான நேரத்தில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால்….கோலார் தங்கச் சுரங்கம் அருகில் வசிக்கும் பழங்குடியினர் பற்றிய கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனின் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.

மாளவிகா ரோலில் நடிக்க இருந்த ரஷ்மிகா;

படத்தில் இந்த கேரக்டருக்கு முதன் முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை தான் ஹீரோயினாக போட திட்டமிட்டு இருந்தாராம் இப்படத்தின் இயக்குனரான பா ரஞ்சித் .

ஆனால், அவரால் நடிக்க முடியாத காரணத்தால் பின்னர் மாளவிகா மோகனனை தேர்வு செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நடிக்காததற்கு காரணம் என்ன ?என கேட்டதற்கு அவர் மற்ற படங்களில் கமிட் ஆகி இருந்ததால் தேதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதனால் அவர் விலகிவிட்டார் என பா ரஞ்சித் கூறியிருந்தது குறிப்பிட்டதக்கது ஒருவேளை மாளவிகாவின் இந்த பேய் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிக்கா மந்தனா நடித்திருந்தால் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக வேறு மாதிரி தோற்றத்தில் ராஷ்மிகாவை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version