நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? பலரும் இதுவரை பார்த்திடாத போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கி 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தவர் தான் நடிகர் முரளி.

இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சியமான பிரபலமான நடிகராக அறியப்பட்டார்.

நடிகர் முரளி:

நல்ல கருமையான தோற்றம், மிகச் சிறந்த நடிப்பு, தோற்றத்தில் மிகவும் எளிமை என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார் .

நடிகர் முரளி இதுவரை கிட்டத்தட்ட 65-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து அசத்தி இருக்கிறார் .

முரளி முதன் முதலில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக அறிமுகமாகி இருந்தார் .

1990 இல் வெளிவந்த புது வசந்தம் என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

வெற்றி நாயகனாக முரளி:

தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு வெளிவந்த இதயம் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்ததோடு இவர் நட்சத்திர நடிகர் என்ற ஒரு அந்தஸ்தையும் பெற்றார்.

திரைப்படத்தில் காதல், எமோஷ்னல் உள்ளிட்ட காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருப்பார் முரளி. அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் அனைவருக்குமே கண்ணீர் கலங்கி அழுதுவிட்டார்கள்.

அந்த அளவுக்கு முரளி தன்னுடைய நடிப்பில் அனைவரையும் கட்டி போட்டு வைத்திருந்தார். அதன் பிறகு கடல் பூக்கள் என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகர் முரளி.

முரளி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்களான பகல் நிலவு, கீதாஞ்சலி, பூவே உனக்காக, காலமெல்லாம் காதல் வாழ்க, வெற்றி கொடி கட்டு, ஆனந்தம் , சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முரளியின் தந்தையான சித்தார்த் கன்னடர் ஆவார். இவர் பல படங்களில் தயாரித்தும் இருக்கிறார். அதன் மூலம்தான் முரளிக்கு நடிகையாகும் வாய்ப்பே கிடைத்தது.

முரளியின் மனைவி:

நடிகர் முரளி ஷோபா என்பவரை கடந்த 1987 ஆம் ஆண்டு. திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அதர்வா ஆகாஷ் என்ற இரண்டு மகன்களும் காவியா என்ற ஒரு மகளும்.

இதில் இவரது மூத்த மகனான அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

பார்ப்பதற்கு மிகவும் ஹேண்ட்ஸமான தோற்றத்தில் இருப்பதால் இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் இருக்கிறார்கள் .

அதர்வா முதன்முதலில் பானா காத்தாடி திரைப்படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார். இத்திரைப்படத்தின் முரளி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் .

முரளி நடித்த கடைசி திரைப்படமே அதுவாக அமைந்துவிட்டது. ஆம் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம்தேதி முரளி மாரடைப்பால் இயற்கை எழுதிவிட்டார்.

இவர் நடிகராக இருந்தபோதே அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அதிமுகவில் இணைந்து கட்சி தேர்தலுக்காக சுற்றுப்பயணம் செய்து பிரசாரமும் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version