விளம்பரத்திற்காக மக்களை ஏமாற்றினாரா நடிகை நயன்தாரா..? வெடித்த சர்ச்சை..!

தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டாரக திகழும் நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் வெளி வந்த ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார்.

தமிழ் திரை உலகை பொருத்த வரை ஐயா என்ற திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த இவர் தமிழில் முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா..

நடிகை நயன்தாரா நடிக்கின்ற காலத்திலேயே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக திகழ்ந்தவர்.இவர் ஆரம்பத்தில் சிம்புவோடு கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதனை அடுத்து பிரபுதேவா உடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

கடைசியில் தமிழ் இயக்குனர்களில் ஒருவராக திகழும் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார்.

இந்நிலையில் சினிமாத்துறை மட்டுமல்லாமல் வியாபாரத்திலும் களைகட்டி வரும் இவர் ஒரு மிகச்சிறந்த தொழில் அதிபராக விளங்குவதோடு மட்டுமல்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார்.

ஏற்கனவே சொன்னது போல் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நயன்தாரா தற்போது சிக்கி இருக்கும் சர்ச்சை தான் தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு அனைவரையும் ஆச்சிரியத்தில் தள்ளி உள்ளது.

விளம்பரத்துக்காக மக்களை ஏமாற்றினாரா..

இதற்குக் காரணம் தனது சமூக வலைதள பக்கத்தில் செம்பருத்தி தேநீரை குடித்தால் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்தது.இதை தான் பல நாட்களாக பயன்படுத்தி வருவதாகவும் ஆயுர்வேதத்தில் இது ஒரு சிறந்த மருந்தாக சொல்லப்பட்டு இருப்பதை இவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த செம்பருத்திப்பூ டீயை பருகுவதின் மூலம் உடலில் இருக்கும் அதிகபட்சமான கொழுப்புகள் கரைவதோடு மட்டுமல்லாமல் இதயத்திக்கும் பலம் அளிக்கும் என்று இவர் செய்த பதிவில் ஒரு நியூட்ரிஷனை டேக் செய்து இருந்தார்.

இதனை அடுத்து நடிகையாக இருக்கக்கூடிய இவர் வேண்டாத விஷயத்தில் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும் என்ற ரீதியில் இந்த பதிவுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார் மருத்துவர் ஆபே பிலிப்ஸ் என்பவர்.

மேலும் இந்த டீ பற்றி அவர் சொல்லும் போது இந்த டீயை அதிகம் பெறுவதால் நாளடைவில் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்று சொல்லியதை அடுத்து எதனால் தான் நயன்தாரா வாடகை தாயின் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

செம்பருத்தி டீ யால் வெடித்து சர்ச்சை..

அத்தோடு முற்று பெறாது இந்த சர்ச்சை அந்த மருத்துவரின் மூலம் நயன்தாரா கூறிய கருத்துக்களுக்கு ஆதாரம் இல்லை இன்னும் நிரூபிக்க படாத ஒன்று தான் என்று விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த செம்பருத்தி டீ குறித்த பதிவானது முழுக்க முழுக்க ஒரு நியூட்ரிஷனுக்காக நயன்தாரா செய்த விளம்பரம் தான் என்று சொல்லியதை அடுத்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் மாபெரும் சர்ச்சையாக எந்த விஷயம் வெடித்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கலவை ரீதியான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் வேறு சில ரசிகர்களோ இது போன்று வம்படியாக சிக்கல்களில் சிக்கிக் கொள்வதை விடுத்து விட்டு வேண்டாத பதிவுகளை போடாமல் தேவையானது மட்டும் கவனத்தை செலுத்தினால் போதும் என்று நயன்தாராவிற்கு அட்வைஸ் களை வழங்கி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version