ஆண்மையை பறிக்கும் நயன்தாராவின் செயல்.. அபாயத்தை இழுத்து விட்டு.. வெடித்த சர்ச்சை..!

தமிழில் பிரபல நடிகையான நயன்தாரா சமீபத்தில் போட்ட ஒரு பதிவின் காரணமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பொதுவாகவே பிரபலங்கள் ஏதாவது கருத்தை தெரிவித்து பதிவு போடுவது என்பது சாதாரண விஷயம்.

ஆனால் சமீபத்தில் நயன்தாரா போற்ற பதிவிற்கு மருத்துவர் ஒருவர் கொடுத்த பதிலடி காரணமாகதான் இப்பொழுது அது பெரும் பஞ்சாயத்தாக வெடித்து வருகிறது.

செம்பருத்தி டீ:

சமீபத்தில் நயன்தாரா செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அவருக்குத் தெரிந்த மருத்துவரான முன் முன் கென்ரிவால் என்கிற மருத்துவரின் ஆலோசனையின் பேரில்  செம்பருத்தி டீ உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தரக்கூடியது என்பதை விவரித்து இருந்தார் நயன்தாரா .

அந்த பதிவில் அவர் கூறும்போது வெகு காலங்களாகவே ஆயுர்வேதத்தில் செம்பருத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அதிகமாக ஆண்டி ஆண்டி ஆக்சிடெண்ட்களை கொண்டிருப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடலில் கொழுப்புகள், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஆகியவற்றை சரி செய்வதற்கு செம்பருத்தி டீ உதவுவதாக ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

அதனை எதிர்க்கும் விதத்தில் சிரியாக் அபி பிலிப்ஸ் என்னும் பிரபல கேரள மருத்துவர் வெளியிட்ட பதிவுதான் இப்பொழுது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சிரியாக் அபி பிலிப்ஸ் ஏற்கனவே சமந்தா ஒரு முறை இதே மாதிரியான தவறான மருத்துவ குறிப்பு ஒன்றை கூறிய பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

பதிலளித்த மருத்துவர்:

இந்த நிலையில் நயன்தாராவிற்கு பதிலளித்த அவர் கூறும் பொழுது செம்பருத்தி டீ யில் எந்த மருத்துவ குணமும் கிடையாது. இந்த மாதிரியான மருத்துவ குணங்கள் அதில் இருக்கிறது என்பதற்கு இப்பொழுது வரை எந்த ஒரு அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் கிடையாது.

எனவே இந்த மாதிரி பொய்யான மருத்துவ குறிப்புகளை பிரபலங்கள் பகிரக்கூடாது. மேலும் செம்பருத்தி டீ தொடர்ந்து குடிப்பதன் மூலம் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் அந்த மருத்துவர்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக இன்று ஸ்டோரி ஒன்றை வைத்த நயன்தாரா யாராவது செம்பருத்தி டீ யை பற்றி விளக்கம் தெரிய வேண்டும் என்றால் இந்த பக்கத்திற்கு சென்று பார்க்கவும் என்று  தனது மருத்துவரின் இன்ஸ்டா பக்கத்தை ஷேர் செய்து இருந்தார். மேலும் சிரியக் அபி பிலிப்ஸின் இன் பதிவுக்கு நயன்தாராவின் மருத்துவரும் எதிர்ப்பு தெரிவித்து பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version