“டான்” – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..? – திரை விமர்சனம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் இன்று உலகம் முழுதும் வெளியாகியுள்ளது டான் திரைப்படம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே நாம் பார்க்கலாம். இந்த படத்தின் கதை வழக்கமான தமிழ் சினிமாவில் நாம் ஆயிரம் முறை பார்த்து சலித்த கதைதான் என்றாலும் படத்தின் திரைக்கதை இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

என்ன கதை..

கதைப்படி சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹீரோவான நடிகர் சிவகார்த்திகேயன் சிறுவயதிலிருந்தே அப்பாவின் கண்டிப்பான வளர்ப்பில் வளர்கிறார். சிவகார்த்திகேயன் அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். மகன் படித்து இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிவகார்த்திகேயனை ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்.

படிப்பு ஏறாத ஹீரோ தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யலாம் என்ற முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா..? இல்லையா..? என்பதுதான் படத்தின் மீதி கதை.

இந்த கதையை காலங்காலமாக நம் தமிழ் சினிமாவில் பார்த்து வருகிறோம் என்றாலும் இந்த படத்தின் திரைக்கதை நல்ல முறையில் வேலை செய்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

என்ன பண்ணியிருக்காங்க..

பெற்றோர்களின் ஆசைகள் படி படிக்க படித்து வரும் மாணவர்களுக்கு அவர்களுக்குள்ளும் ஒரு ஆசை இருக்கிறது என்பதை தெளிவாக எந்தவித ஒளிவு மறைவுமின்றி தத்ரூபமாக படத்தில் காட்டியிருப்பது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம்.

படத்தின் திரைக்கதை இன்றைய இளைஞர்களின் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு கவனமாக எழுதியுள்ளனர் என்பது படத்தை பார்க்கும் போதே தெளிவாக நமக்கு தெரிகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் எந்த ஒரு சிரமமுமின்றி இயற்கையாகவே தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

சிவகார்த்திகேயனின் காதலியாக வரும் கதாநாயகி பிரியங்கா அருள் மோகன் நாயகன் சிவகார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் கல்லூரியில் காதல் கதைகள் அதிகமாக இல்லை. ஆனால், பிளாஷ்பேக்கில் பள்ளியில் நடக்கும் அந்த காதல் காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கும் படியாக இருக்கின்றது.

பள்ளி மாணவியாகவும், அதே சமயம் கல்லூரி மாணவியாகவும் நடித்து கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் பிரியங்கா மோகன்.

எஸ் ஜே சூர்யா கல்லூரியின் பெரிய பொறுப்பில் இல்லை என்றாலும் ஒட்டுமொத்த கல்லூரியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ப்ரொபசர் ஆக நடித்திருக்கிறார்.

படம் எப்படி இருக்கு..

சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் படுபயங்கரமாக நடித்திருந்த சூர்யாவை பார்த்து விட்டு இந்த படத்தில் இவரை பார்க்கும்பொழுது என்னமோ மிஸ்ஸிங்.

மேலும் சிவகார்த்திகேயன் நண்பர்களாக வரும் பாலசரவணன் சிவாங்கி ஆர்ஜே விஜய் ஆகியோர் படத்தின் கலகலப்புக்கு இன்னும் மெருகேற்றி உள்ளார்கள்.

படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டி லட்சுமி ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் மனதில் நச்சென நின்று விடுகிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் அடித்து விட்டன தற்போது படமும் ஹிட் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

படத்தின் சில காட்சிகள் மட்டும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்ற ஒரு எண்ணத்தை கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாக ஒரு எதார்த்தமான படத்தை பார்த்த திருப்தி கிளைமாக்ஸில் நமக்கு கிடைத்துவிடுகிறது மொத்தத்தில் டான் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …