“இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க..!” – செய்தா பீடை பிடிக்குமாம்..!!

 நமது முன்னோர்கள் கடைப்பிடித்த சில பழக்க வழக்கங்களை நாம் மறந்து விட்டு நாகரீகத்தின் பெயரால் பாழாய் போய் வருவது அனைவருக்குமே நன்றாக தெரிந்தாலும் அதை நாம்  மூடநம்பிக்கை என்று கூறி தவிர்த்து வருகிறோம்.

 எனினும் அவர்கள் கூறி சென்ற அனைத்திலும் அறிவியல் பூர்வமான அர்த்தங்கள் இருக்கிறது என்பதை இன்றைய அறிவியலாளர்கள் மெய்ப்பித்து வந்தாலும் இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் நாம் எந்திரமயமான வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கிறோம்.

 வீட்டில் சிலதை செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் வகுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதை எந்த நாளும் மறவாமல் நாம் கடைபிடிக்க வேண்டும் அப்படி எதை எதை நாம் வீட்டில் செய்யக் கூடாது என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

 நீங்கள் உங்கள் வீட்டில் நீரில் கோலம் போடுவது மிகவும் எதிர்மறையானது என்பதால் நீரைக் கொண்டு கோலம் போடாதீர்கள்.காலை எழுந்து குளித்து முடிந்ததும் உங்கள் நெற்றியை காலியாக விடாமல் விபூதியோ குங்குமமோ வைப்பது சிறந்தது.நெற்றியை காலியாக வைப்பது தவறாகும்.

 அதுபோல் எந்த ஒரு குச்சியையும் நெருப்பு பற்ற வைத்து அதை வீசி எறிவது என்பது தவறான செயலாகும். அதை செய்யக்கூடாது.இரவு நேரத்தில் ஊசியை எடுத்து கோர்த்து துணி தைப்பது மிகவும் தவறான பழக்கம் அதை கைவிட வேண்டும். பெரியவர்கள் இருக்கும் போதும் இல்லாத போதும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து காலை ஆட்டுவது மிகவும் தவறானது.

 காலை நேரத்தில் சூரியன் வெளிவந்து சுல் என்று வெயில் அடிக்கக்கூடிய நேரத்திலும் நீங்கள் எழுந்திருக்காமல் அதிக நேரம் தூங்குவது தவறு. அதுபோல தரையில் எதுவும் விரிக்காமல் உறங்குவதும் தொடையில் தாளம் போடுவதும் மிகவும் தவறு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 நகத்தை நீளமாக வளர்ப்பதும் மல ஜலம் கழிப்பதை தவிர்ப்பது அல்லது தள்ளிப் போடுவதும் உங்களுக்கு தீமையை அளிக்கும் என்பதால் அதை உடனே செய்து விட வேண்டும்.

 தினம்தோறும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு சென்று வருவது மிகவும் நல்லது. அதிகமாக எதை பற்றியும் வீணாக பேசுவதை தவிர்ப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம்.

 தலைக்கு கட்டாயம் எண்ணெய் தேய்க்க வேண்டும்.வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறப்பானது. ரோட்டிலும் வீதியிலும் சந்தியிலும் நின்று எதையும் சாப்பிடக்கூடாது.

 நீங்கள் படுத்த இடத்தில் விரித்து இருக்கும் பாய் அல்லது விரிப்பை நீங்கள் மடித்து வைக்க வேண்டும். பகலில் படுத்து உறங்க கூடாது.

 குளிக்க செல்வதற்கு முன்பு சாப்பிடுவது உங்களுக்கு செரிமான பிரச்சனைகளை தோன்றும். குளித்த பின் துடைக்காமல் ஈரம் சொட்ட சொட்ட நிற்பது தவறு.

 கடவுளின் நாமத்தை அனுதினமும் சொல்லுவது சிறப்பு. நன்றாக வாழ்பவர்களை பார்த்து பொறாமைப் படுவதும் அவர்கள் குடியை கெடுக்க நினைப்பதும் பஞ்சமா பாதகங்களில் ஒன்று. இவற்றை என்றுமே நாம் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

 எனவே இதனை உணர்ந்து நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு இதை நீங்கள் கற்றுத் தருவதின் மூலம் எதிர்வரும் தலைமுறையும் இதை கடைபிடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …