அட கொடுமையே.. இவங்க தான் விவாகரத்துக்கு காரணம்.. உண்மையை உடைத்த ஜெயம் ரவியின் காஸ்ட்யூம் டிசைனர்..

நட்சத்திர தம்பதிகளான ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து விஷயங்கள் அண்மையில் இணையங்களில் அதிக அளவு பேசும் பொருளாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள்.

பொதுவாகவே விவாகரத்து பெறக்கூடிய தம்பதிகள் அவர்கள் இருவரும் இணைந்து தான் பிரிய இருக்கின்ற விஷயத்தை அறிவிப்பார்கள். ஆனால் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. ஆர்த்தியை விடுத்து ஜெயம் ரவி தான் தனது விவாகரத்து குறித்து அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இவங்க தான் விவாகரத்துக்கு காரணமா?

இதனை அடுத்து திரையுலகம் எங்கும் கடுமையான அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டதோடு வெகுஜன மத்தியில் மட்டுமல்லாமல் ஜெயம் ரவியின் ரசிகர்களின் மத்தியிலும் இந்த விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை பேசும் பொருளாக மாறி இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

 

மேலும் எந்த காரணத்தை வைத்து ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்திருக்கிறார் என்ற கோணத்தில் ஒவ்வொரு வரும் யோசித்து வரக்கூடிய சூழ்நிலையில் தன்னையும் தன் பிள்ளைகளையும் சற்றும் நினைத்துப் பார்க்காமல் சுயமாக முடிவெடுத்து என்னிடம் அது பற்றி பேசாமல் அறிக்கையை வெளியிட்டது பற்றி ஆர்த்தி தனது கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

மேலும் எமோஷனலாக ஆர்த்தி பேசியிருக்கக் கூடிய விஷயத்தை பார்த்து பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருவதை அடுத்து மீடியாக்கள் பரபரப்பாக இருந்த விஷயம் குறித்து தற்போது செய்திகளை வெளியிட்டு வருகிறது.

ஜெயம் ரவி எடுத்திருக்கும் தனிப்பட்ட முடிவால் தான் மட்டுமல்லாமல் தனது குழந்தைகளும் கஷ்டப்படுவதாக ஆர்த்தி அந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தனது கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஜெயம் ரவியுடன் நேரடியாக கலந்து பேசினால் கட்டாயம் மாற்றம் ஏற்படும் என்பதை ஆர்த்தி உறுதியாக நம்புவதோடு தன் கணவரை தேடி கணவரது வீட்டிற்கும் அவரது அலைபேசிக்கும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பேச முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

உண்மையை உடைத்த காஸ்ட்யூம் டிசைனர்..

இந்நிலையில் ஜெயம் ரவியின் படங்களில் அவருக்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிய டார்த்தி ஜெய் சில தகவல்களை பகிர்ந்து இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. இவர் ஜெயம் ரவியின் போகன் உள்ளிட்ட பல படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றியவர்.

இந்த விவாகரத்து குறித்து அவர் பேசும்போது சமீபகாலமாக விவாகரத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதற்கு காரணம் பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்ததை அடுத்து ஆண்களை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.

 

மேலும் குறிப்பாக ஒரு காலத்தில் ஆண்களின் கீழ் அடிமை போல் இருந்த பெண்கள் அவர்கள் அடித்தால் கூட அடக்கி வாசித்து இருந்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் நிலைமையே வேறு. எதையும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது சொந்த காலில் நிற்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கின்ற விஷயங்களை பார்த்து பொறுத்துக்கொண்டு போகாமல் அவர்களது உரிமைகளை எடுத்துப் பேசக்கூடிய காலமாக மாறிவிட்டது.

இந்நிலையில் ஜெயம் ரவியை பொறுத்த வரை அவரது வாழ்க்கைத் துணை தன்னை கௌரமாக நடத்தவில்லை என்ற பிரச்சனை அவருக்குள் உள்ளது. மேலும் அவரோடு இணைந்து வாழ்வதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என்று ஜெயம் ரவி விவாகரத்து பற்றி பேசிய டார்தி ஜெய் விவாகரத்து என்பது ஜெயம் ரவியின் தனிப்பட்ட விஷயம் என்பதையும் கூறி இருக்கிறார்.

தொழில் ரீதியாக ஜெயம் ரவி மிகவும் ஜென்டில்மேன் அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடிய குணம் படைத்தவர். முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றும் போது அவருடைய நல்ல குணம் எனக்கு மிக நன்றாக தெரிந்தது என்று சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version