அதுக்கு தொறந்து போட்டு வர்றே..? உடம்பு தான் மூலதனம்..! ஒரு லட்சம் போதும்.. வேட்டையாடும் நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் விருது வழங்கும் விழாக்கள் என்பவை தற்சமயம் அதிகரித்து வருகிறது என்று கூறலாம். முன்பெல்லாம் விருதுகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருந்தது. சில முக்கியமான அமைப்புகள் மட்டுமே சினிமாக்களுக்கு விருதுகளை வழங்கி வந்தன.

ஆனால் இப்பொழுது எல்லாம் நிறைய பேர் வழங்குகின்றனர். சின்ன தொலைக்காட்சி நிறுவனமான ஜி நிறுவனம் கூட விருதுகளை வழங்குகிறது அதேபோல ஆன்லைன் மீடியாவான பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனமும் வழங்குகிறது.

பிலிம்பேர் விருதுகளின் முக்கியத்துவம்:

இப்படியெல்லாம் விருதுகளை பலரும் வழங்கிக் கொண்டு வருகையில் பிலிம் பேர் விருது என்பது மட்டும் அதில் முக்கியத்துவமானதாக இருந்திருக்கிறது. ஏனெனில் பல காலங்களாக தமிழ் சினிமாவில் வழங்கப்படும் விருதாக அது இருக்கிறது. அதற்கு வந்த நடிகைகள் பலருமே மிக கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

கீர்த்தி சுரேஷ், ஜோதிகா மாதிரியான முன்னணி நடிகைகளே இப்படியான ஆடைகளை அணிந்து வருவதை பார்க்க முடிந்தது. இது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் இது குறித்து மருத்துவர் காந்தராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அவர் கூறும் பொழுது பிலிம் பேர் ஆரம்பித்த காலம் முதலே அதில் நிறைய சர்ச்சைகள் உண்டு. ஆரம்பத்தில் குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டும் தொடர்ந்து பிலிப்ஃபேர் விருதுகளை வழங்கி வந்தார்கள். அதன் பிறகு அந்த நடிகர்கள் செய்யும் ஏமாற்று வேலையை கண்டறிந்து பிலிம் பேரில் விருது வழங்கும் முறையை மாற்றி அமைத்தார்கள்.

நடிகைகள் செய்ய இதுதான் காரணம்:

அதன் பிறகு ஒழுங்காக ஃபிலிம் பேர் நடந்து வந்தது. பிறகு அமிதாப் பச்சன் மீண்டும் அதில் சில வேலைகளை செய்து அவருக்கு சாதகமாக அந்த விருதுகளை வாங்கினார். நாங்கள் இருந்த அந்த காலகட்டங்களில் ஃபிலிம் பேர் விருது முக்கியமான ஒரு விருதாக பார்க்கப்பட்டது.

அதனால் குறுக்கு வழியிலாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நடிகர்களின் ஆசையாக இருந்தது. இப்பொழுது விருதுகளுக்கு மதிப்பே இல்லை என்னை கூட ஒருவர் ஒருமுறை அழைத்து ஒரு லட்ச ரூபாய் கொடுங்கள் உங்களுக்கு விருதை வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

நான் ஒரு மருத்துவர், விருதை வாங்கி வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது.. எனவே நான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்று கூறியிருந்தார் காந்தராஜ். இந்த நிலையில் அவரிடம் நடிகைகள் எல்லாம் கவர்ச்சியாக வந்தது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த காந்தராஜ், அவர்களது உடல் தான் அவர்களுக்கு மூலதனம் அந்த உடலை வைத்துதான் அவர்களுடைய ஊதியத்தை பெற வேண்டும் இப்படி எல்லாம் கவர்ச்சியாக வந்தால் அவர்களை பார்க்கும் தயாரிப்பாளர்கள் அவர்களை அழைப்பார்கள். இதற்காக தான் அவர்கள் அப்படி அணிந்து வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் மருத்துவர் காந்தராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version