மீண்டும் செய்தி வாசிக்கலாம்.. ஏமாற்றிய தனியார் மருத்துவமனை.. 1 கோடி போச்சு.. உயிரும் போச்சு.. சௌந்தர்யாவுக்கு நடந்த அநீதி..!

இன்று தனியார் தொலைக்காட்சிகளில் செய்திகளை வாசிக்கும் செய்தி வாசிப்பாளருக்கும் அதிகளவு ரசிகர்கள் சினிமா நடிகைகளுக்கு இருக்கக்கூடிய அளவு உள்ளார்கள்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளரான இளம் வயதை நிறைந்த சௌந்தர்யா பற்றி உங்களுக்கு தெரியுமா? இவர் செய்தி வாசிக்கும் போது தமிழில் உச்சரிக்க கூடிய உச்சரிப்பை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படும். அந்த அளவு சிறப்பான உச்சரிப்போடு செய்திகளை வாசிப்பார்.

மீண்டும் செய்தி வாசிக்கலாம்..

தந்தையின் துணை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்த சௌந்தர்யா ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து எப்படியும் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய வகையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் இதற்கு உரிய ஸ்டெம் செல் சிகிச்சையை மேற்கொண்டால் கண்டிப்பாக சௌந்தர்யா குணம் அடைந்து மீண்டும் செய்தி வாசிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே 20 லட்சத்துக்கு மேல் செலவு செய்திருந்த அவர்கள் எப்படியும் தன் மகளை காப்பாற்றி விட வேண்டும். அவள் மீண்டும் செய்தி வாசிக்க ஆசைப்படுகிறார் என்ற எண்ணத்தில் அந்த மருத்துவரின் ஆலோசனையை ஏற்று சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

மேலும் போதுமான நிதி இல்லாததால் இது குறித்து இணைய பக்கங்களிலும் தன்னுடைய சூழ்நிலையை சௌந்தர்யா எடுத்துக் கூற பல்வேறு வகைகளில் இவருக்கு உதவிகள் வந்து சேர்ந்தது.

ஏமாற்றிய தனியார் மருத்துவமனை..

அந்த வகையில் ஊடகத் துறையில் இருந்து 5 லட்சம் ரூபாயும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இவருக்கு உதவி செய்தும் பிரயோஜனம் இல்லாமல் போனது இதற்கு காரணம் இவர்களை ஏமாற்றிய தனியார் மருத்துவமனை தான்.

வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சௌந்தர்யாவிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் ஓரளவு உடல் நிலை தேறியிருந்தார் எனினும் இடையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து மீண்டும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது ரத்த புற்று நோய்க்காக என்னென்ன சிகிச்சை உள்ளதோ அதை மீண்டும் கொடுக்க முடிவு செய்து அதற்குரிய சிகிச்சைகளை கொடுத்தார்கள்.

எனினும் ஒரு கட்டத்தில் சௌந்தர்யாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து உரிய சிகிச்சை சென்று கொண்டு உள்ளது என்று கூறினார்களே தவிர நிலைமை மோசமாக உள்ளது என்பதை தெரிவிக்காமல் இருந்தார்கள்.

ஒரு கோடியும் போச்சு உசுரும் போச்சு..

இதனை அடுத்து மகளின் நிலை பற்றி அந்த மருத்துவமனையில் அவர் அம்மா கேட்ட பிறகு நிலைமை பற்றி கூறினார்கள். எனினும் நிலைமை கை மீறி போய்விட்டது. இவரது மருத்துவ செலவிற்காக பல லட்சங்களை செலவு செய்ததோடு மட்டுமல்லாமல் சௌந்தர்யாவின் உயிரும் பிரிந்து சென்று விட்டது.

இப்படி தனியார் மருத்துவமனை சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம் என்ற ரீதியில் டாக்டர் ஷர்மிளா பேசியதோடு ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யாவிற்கு ஏற்பட்ட நிலை குறித்து தனது youtube சேனல் பேசி இருக்கிறார்.

சௌந்தர்யாவிற்கு நடந்த அநீதி..

 

மேலும் நன்கு படித்து அனைத்தையும் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்த சௌந்தர்யாவிடம் இந்த நோயின் தாக்கம் எப்படி இருக்கும் இதற்கு இந்த அளவு தான் சிகிச்சை அளிக்க முடியும் எவ்வளவு அளித்தாலும் கடைசியில் நிலைமை இது தான் என்று எடுத்துக் கூறி இருந்தால் இருக்கின்ற கடைசி நாட்களில் சந்தோஷமாக அவர் இருந்திருக்கலாம்.

மேலும் அவரது சகோதரர் மற்றும் தாய்க்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வைத்து இருக்கலாம். அப்படியெல்லாம் செய்யவிடாமல் மீண்டும் செய்தி வாசிக்கலாம் என்று தனியார் மருத்துவமனை சௌந்தர்யாவை ஏமாற்றிய விஷயத்தை போட்டு உடைத்து இருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …