” கனவு இல்லம் கட்டி விட்டீர்களா..!” அப்படியானால் அத பராமரிப்பது எப்படினு தெரிந்து கொள்ளுங்கள்…!

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு என்று சொந்தமாக ஒரு கனவு இல்லம் வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவு இல்லத்தை கட்டி முடித்தால் மட்டும் போதாது.

அதை சரிவர பராமரித்து வைத்தால் மட்டுமே வீடு அதன் பொலிவை இழக்காமல் என்றும் அழகாக இருக்கும். எனவே நமது வீடு அழகாக பொலிவுடன் காட்சி அளிக்க நாம் சில பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். அப்போதுதான் வீடு சுத்தமாக பார்ப்பதற்கு லட்சுமி கடாட்சமாக மனதில் சந்தோஷத்தை தரும் விதத்தில் அமையும்.

 வீட்டை பராமரிப்பதற்கான குறிப்புகள்

 பொதுவாக வீட்டில் குப்பைகள் அதிகம் சேராமல் இருக்க வீட்டுக்குள் இருக்கக்கூடிய அறைகளை அடிக்கடி நீங்கள் கூட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டால் அதிக அளவு குப்பை சேராமல் இருக்கும்.

 மேலும் வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் வாரத்தில் இரு நாள் செவ்வாய், வெள்ளி இந்த இரண்டு நாட்களும் கட்டாயம் வீட்டை மெழுகி விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இன்று பெரும்பாலும் டைல்ஸ் தரை என்பதால் நீங்கள் கழுவி விட முடியாது துடைத்து எடுத்தாலே போதுமானது.

 அப்படி நீங்கள் துடைக்கும் போது சிறிதளவு உப்பினை போட்டு வீட்டினை துடைத்து விட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் அத்தனையும் தெரித்து வெளியே சென்று விடும்.

 தரை பளிச்சென்று மின்ன வெள்ளை நிற வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை நீங்கள் ஊத்தும் லிக்விட் உடன் கலந்து துடைத்து விடுவதின் மூலம் தரை பள பளப்பாக மாறும்.

அது போலவே மாதத்திற்கு ஒரு முறை கதவு, நிலவு, ஜன்னல் போன்றவற்றில் படிந்து இருக்கக்கூடிய தூசிகளை துடைத்து எடுத்து விட வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் ஜன்னல் வழியாக வருவது குறையும்.

மேலும் அதிகளவு தூசிகள் இல்லாமல் இருந்தால் பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை குஷன், திரைச் சேலைகள், கவர், சோபா கவர், மெத்தை கவர் இவற்றை துவைத்து விடுவதின் மூலம் உங்களது ஆரோக்கியம் மேம்படும்.

 வீட்டில் இருக்கும் குளியல் அறைகளை சுத்தம் செய்யும் போது கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். அதை குறைக்க நீங்கள் வாரத்துக்கு ஒரு முறை ஹிட் அடித்து விட்டாலே போதுமானது. வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டில் வைத்திருக்கும் அலங்கார பொருட்களை துடைத்து சுத்தம் செய்யும் போது அது அழகில் மிளிரும்.

 வேலையே இல்லை என்று நினைக்காமல் அழுக்கு படிந்திருக்கும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்வது ஒழுங்கற்ற பொருட்களை ஒழுங்காக வைப்பதை வழக்கமாக்கி வளர்க்க படுத்திக் கொள்வது அவசியம்.

இதுமாதிரி சமையலறை அலமாரிகள், சமையலறையில் இருக்கும் பொருட்களையும் அடிக்கடி தூசி தட்டி விடுவதால் நன்மை கிடைக்கும். பார்ப்பதற்கும் பளிச்சென்று இருக்கும். அதுபோலவே சுவர்களில் கீறல்கள், வெடிப்புகள் ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்து விட வேண்டும்.

 மேலும் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிகளில் வீட்டுக்கு வர்ணம் பூசுவது வீட்டின் அழகை மெருகேற்றும் இதுபோல செய்வதால் உங்கள் வீடு என்றும் பளபளப்பாக பொலிவுடன் காட்சி அளிக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam