இதனால் தான் விஜயகாந்த் குடிக்க ஆரம்பித்தார்..! யாருக்கும் தெரியாத ரகசியத்தை அம்பலப்படுத்திய விஜயகாந்த் டிரைவர்..!

இருக்கும் வரை ஒரு நபரின் அருமை தெரியாது என்று கிராமப்புறத்தில் கூறுவார்கள். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் மனிதருள் மாணிக்கமாக விளங்கியது தற்போது நிதர்சன உண்மையாக உலகம் முழுவதும் தமிழ் மக்களால் பேசப்படுகிறது.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் செய்த தான தர்மங்கள் மட்டுமல்லாமல் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதுகெலும்பாய் இருந்தவர்.

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த மாதம் உயிரிழந்ததை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு தண்ணீரில் மூழ்கியது என கூறலாம். அவர் உயிரிழந்ததை அடுத்து அவரது நினைவுகளை பலரும் பல்வேறு வகையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது விஜயகாந்துக்கு 30 ஆண்டுகளாக டிரைவராக இருந்த வெங்கடேசன் விஜயகாந்த் பற்றி சில ரகசிய தகவல்களை பகிர்ந்து ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்து விட்டார்.

விஜயகாந்த் ஏராளமான உதவிகளை சாமானியர்களுக்கு மட்டுமல்லாமல் இன்று உச்சகட்ட நட்சத்திரங்களாக இருக்கக்கூடிய விஜய் சூர்யா வரை செய்திருக்கிறார். அவர்கள் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு விஜய்காந்தே காரணம் என்று கூறலாம்.

மேலும் விஜயகாந்தின் ஆபீசுக்கு சென்றால் வயிறு நிறைய சாப்பிட்டு வரலாம் என்ற நிலை திரை உலகு மத்தியில் இருந்தது. திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் அரசியலில் குதித்து குறுகிய நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராக மாறினார்.

இதனை அடுத்து இவருக்கு அரசியல் சதுரங்கத்தில் துரோகங்களும், சூழ்ச்சிகளும் கேப்டனை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி உடல்நிலை சரியில்லாமல் போனது.

எனினும் உடல் நிலையை சீர் செய்ய அவ்வப்போது சிகிச்சைகளை மேற்கொண்டும் பலன் இல்லாமல் போனதால், அரசியலில் இருந்து முற்றிலும் விலகி ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இவரது ஓட்டுநர் விஜயகாந்த் குறித்து சில விஷயம் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் இவர் இப்ராஹிம் ராவுத்தர் தான் விஜயகாந்த்திடம் தன்னை வேலைக்கு சேர்த்து விட்டதாக கூறியிருக்கிறார். வேலைக்கு சேர்ந்த நேரத்தில் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார்.

நான் ஒரு ஓட்டுநர் மட்டுமல்லாமல் மெக்கானிக் வேலையும் செய்பவன் காரை வேகமாக ஓட்டி அவரை சூட்டிங் ஸ்பாட்டில் சேர்த்து விட்டதை அடுத்து என் மீது அதிக பாசத்தோடு என்னையும் வீட்டில் ஒருவராக வைத்துப் பார்த்தவர்.

30 வருடங்களுக்கு மேலாக அவரோடு நான் ஓட்டுனராக இருந்திருக்கிறேன். ஒரு நாள் கூட என்னை ஓட்டுனரைப் போல நடத்தியதில்லை. வெளியே தங்கக்கூடிய சமயத்தில் கூட அவர் மெத்தையிலேயே என்னை படுத்துக்கொள்ள சொல்வார்.

என் தேவை அறிந்து எல்லாவற்றையும் செய்து கொடுத்த அண்ணன் அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது உண்மை தான். ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர் மதுவுக்கு அடிமை ஆகவில்லை.

கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ளக்கூடிய இவர் சண்டைக்காட்சிகளில் நடித்து முடித்து விட்டு வரும் போது உடல் வலியை நீக்குவதற்காக சிறிதளவு குடிப்பார்.

அதனால் தான் அவரால் எதார்த்தமாக சிறப்பாக சண்டை காட்சிகளில் கவனத்தை செலுத்தி நல்ல பெயரை பெற முடிந்தது. எனவே அவரது இறப்புக்கு குடி காரணம் அல்ல என்பதை உறுதி பட கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயம் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பரவி எத்தனை நாள் அவரை மொடாக் குடியன் என்று நினைத்தது தவறு. மேலும் அவர் மேல் அப்படி ஒரு சாயத்தை பூசி விட்டார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam