திரைப்பட நடிகைகள் பலரும் படங்களில் பார்ப்பது போலே நிஜ வாழ்க்கையில் இருப்பது கிடையாது. மிகவும் பவ்யமாக ஹோமிலியாக நல்ல கருத்துக்களை பேசி திரைப்படங்களில் நடிக்கிறார்கள்.
ஆனால், தங்கள் நிஜ வாழ்க்கையில் எல்லை மீறிய வாழ்க்கையும் வேறொரு உகலகில் இருந்து வருகிறார்கள்.
அவர்களது கலாச்சாரமே வேறு என்ற வகையில் போதை , தவறான போக்கு என இருந்து வருகிறார்கள்.
போதைக்கு அடிமையான சினிமா துறை:
அப்படித்தான் தற்போது ஒரு மிகப்பெரிய நடிகர் நடிகைகள் கூட்டமே ஒரு மது விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி சிக்கி இருக்கிறது.
இந்த விஷயம் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள புறநகர் பகுதியில் பண்ணை வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் வாசு என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு மது விருந்து மற்றும் போதை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது .
இதில் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்க அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு துரிதமாக சோதனை இட்டதில் மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
பண்ணைவீட்டில் போதை விருந்து:
இதில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான முகமறியப்பட்ட நடிகைகள் பலரும் மாடல் அழகிகள், IT நிறுவன ஆண் பெண் ஊழியர்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த போதை விதை விருந்தில் கலந்து கொண்டு மெய்மறந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்களாம்.
இதை எடுத்து அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் இது குறித்த செய்திகளையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் நடிகைகளின் பெயர்கள் மிகப்பெரிய அளவில் டேமேஜ் ஆனதை தொடர்ந்து. அதை பலர் மறுப்பு தெரியவந்துள்ளனர்.
சிக்கிய இரண்டு நடிகைகள்:
பிரபல தெலுங்கு நடிகையான ஹேமாவும் இந்த போதை விருந்து கலந்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் அதற்கு ஹேமா மறுப்பு தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் நான் பெங்களூரில் அந்த சமயத்தில் நிலவே இல்லை. அவர்கள் கூறும் அந்த சமயத்தில் நான் ஹைதராபாத்தில் இருந்தேன் என வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மற்றொரு நடிகையான ஆஷா ராயும் அந்த பிறந்தநாள் பாட்டில் நான் பண்ணை வீட்டில் கலந்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அங்கு போதை விருந்து நடைபெற்றது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது எனக்கூறி எஸ்கேப் ஆனார்.
விசாரணையில் நடிகை ஹேமா போதை மருந்து. பயன்படுத்தியது பெங்களூரு போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கில் கிட்டத்தட்ட 103 பேரிடம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து அதில் 86 பேர் போதை பொருட்களை பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டன .
விரைவில் கைது:
குறிப்பாக அதில் நடிகைகள் ஹேமா . ஆஷா ராய் இருவரும் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியாகிவிட்டது.
இவர்களுடன் 58 ஆண்கள் மற்றும். 27 பெண்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியதால் அவர்கள் அனைவருக்கும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எனவே விரைவில் இது குறித்த விசாரணையில் பலபேர் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
குறிப்பாக நடிகைகள் இருவர் கைது செய்யப்பட இருப்பதால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.