Site icon Tamizhakam

இதனால தான் மலையாள சினிமாவில் நடிப்பதில்லை.. துல்கர் சல்மான் வேதனை.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் துல்கர் சல்மான். 2012 முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். இவரது இரண்டாவது திரைப்படம் ஆன உஸ்தாத் ஹோட்டல் என்கிற திரைப்படமே அப்பொழுது மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது.

தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். அவரது தந்தை மம்மூட்டியை போலவே அவரும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். துல்கர் சல்மானை பொறுத்தவரை காமெடி கதாபாத்திரத்தில் துவங்கி ரவுடி கதாபாத்திரம் வரை பல வேடங்களில் நடித்துள்ளார்.

துல்கர் அறிமுகம்:

தமிழில் முதன் முதலில் வாயை மூடி பேசவும் என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் துல்கர் சல்மான். துல்கர் சல்மான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவர் மம்முட்டியின் மகன் என்பது பலருக்கும் தெரியாது.

வாயை மூடி பேசவும் திரைப்படத்திற்கு பிறகு ஓ காதல் கண்மணி திரைப்படம் தமிழில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழிலும் ஒரு முக்கியமான நடிகராக மாறினார். இந்த நிலையில் தற்சமயம் மலையாளத்தில் அவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் வருவதில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கு தகுந்தார் போல 2023 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் மலையாளத்தில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும்தான் வெளியாகி இருந்தது. ஒரு மலையாள பிரபலத்தின் மகனாக இருந்தும் கூட ஏன் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற கேள்விகள் இருந்து வந்தது.

தொடர்ந்து வரும் பிரச்சனைகள்:

இந்த நிலையில் இதற்கு துல்கர் சல்மானே பதிலளித்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட துல்கர் சல்மான் இது குறித்து பேசும் பொழுது மலையாள திரைப்படங்களில் என்னை திட்டமிட்டு சிலர் ஒடுக்க முயற்சி செய்கின்றனர்.

வேண்டுமென்றே என்னுடைய திரைப்படங்களுக்கு தடையை உருவாக்கும் முயற்சி செய்கிறார்கள். நான் வேறு மொழி திரைப்படங்களில் நடிப்பதை கூட அவர்கள் விரும்புவதில்லை. அதிலும் வந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர்.

எதற்காக இப்படி பிரச்சனை செய்கிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை என்னுடைய ரசிகர்களுக்காக நான் படத்தில் நடித்திருக்கிறேன் .ஒரு நாளும் நடிகர் மம்முட்டியின் மகன் என்ற முறையில் நான் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் அணுகுவது கிடையாது. என்னுடைய அப்பா ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர் என்பதால் எனக்கு சினிமாவில் எளிமையாக வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம்.

ஆனால் அதில் இந்த உயரத்தை தொடுவதற்கு நான் நிறைய கஷ்டப்பட்டுள்ளேன். இப்பொழுது நடிக்கும் படங்களில் எல்லாம் என்னுடைய முயற்சியில்தான் நடித்து வருகிறேன் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் என்று என்னை அடையாளப்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை.

என்னுடைய திரைப்படத்தில் கூட என்னுடைய தந்தையின் தலையீடு இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால் சிலர் தங்களுடைய அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தி என்னுடைய படங்களில் தொந்தரவு செய்கிறார்கள் அதனால்தான் மலையாள படத்தில் நான் சமீபகாலமாக நடிப்பதில்லை என்று கூறியிருக்கிறார் துல்கர் சல்மான்.

Exit mobile version