சமையல் டிப்ஸ்

காலை உணவிற்கு முன்பு தினமும் ஒரு தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உணவுக்கு பிறகு தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்.

பிரியாணி செய்யும்போது, உணவு அடி பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை வராது.

 பாகற்காயுடன் உப்பு, மஞ்சள் தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு தன்மை இருக்காது.

துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்தால் தொண்டைப் புண் வராது.

பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாகிவிட்டால் அதற்கு ஏற்ப பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி போட்டால் உப்பு தெரியாது.

வெயில் காலங்களில் மாவு விரைவில் புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைத்தால் போதும் மாவு புளிப்பு தட்டாது.

அரை தேக்கரண்டி கரு மிளகுத்தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி தேன் இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

பாகற்காய் சமைக்கும் போது கசப்பு தெரியாமல் இருக்க முதல் நாளே நறுக்கி தரையில் பரத்திவிட்டு மறுநாள் நன்கு கழுவி பயன்படுத்தி னால் கசப்பே தெரியாது.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா வாசனையுடன் சுவையாக இருக்கும்.

 கேரட் மற்றும் தக்காளிச்சாறு உடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்லது.

வெங்காயம் நன்றாக வதங்க சிறிது கல் உப்பு சேர்த்து போட்டு வதக்கினால் விரைவில் வதங்கும்.நேரமும் மிச்சமாகும்.

கீரையை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளும் போது தயிரை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அஜீரண கோளாறுகள் ஏற்படும்.

கீரை மற்றும் பருப்பு வகைகள் சமைக்கும் போது மண் சட்டியில் கடைந்து சாப்பிட சுவை கூடுதலாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …