அவசியம் நீங்க தெரிந்து கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்..!

💐அதிகாலை நீங்கள் எழுந்தவுடன் கோவில், கோபுரம், சிவலிங்க,ம் மலைகள், தீபம், கண்ணாடி சந்தனம் கன்றுடன் இருக்கும் பசு, உள்ளங்கை குழந்தைகள், மனைவி போன்றவற்றை பார்ப்பது நல்லது.

💐 வீட்டில் தனியாக பூஜை அறையை வைத்திருப்பவர்கள் அந்த அறைக்குள் உடைந்த பொருட்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் இறை சக்தியை குறைக்க கூடிய ஆற்றல் அதற்கு இருக்கும்.எனவே ஆன்மீக அதிர்வுகளை அதை ஏற்பட விடாது.

💐 அம்மவாசை, திவசம் போன்ற நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது. மேலும் அம்மாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு ஜென்ம நட்சத்திர தினங்களில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.

💐 மாலை நேரத்தில் பெண்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளால் தலையை சொரிய கூடாது திருஷ்டி சுத்தும் போது பெண்கள் பூசணிக்காயை உடைக்க கூடாது.

💐 அதிகாலை நேரத்தில் நாலரை மணி முதல் 6:00 மணிக்குள் நீங்கள் சுவாமி தீபத்தை ஏற்றுவது நல்லது அதுபோல மாலை ஐந்து வரை மணி முதல் 6:00 மணிக்குள் தீபம் ஏற்றுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

💐 வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த உங்களது முன்னோர் படத்தை வைத்து வணங்காமல் தனியாக வைத்து வணங்குவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

💐 வீட்டில் காலை நேரத்தில் ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களை கேட்பது மிகவும் நல்லது. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் போன்றவை கூடவே கூடாது.

💐 தீபம் ஏற்றும்போது தீபம் தான் எரிய வேண்டுமே ஒழிய தீபத்தில் இருக்கும் திரி கருகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விளக்கினை ஏற்றும்போது வீட்டின் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

💐 புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் செய்யக்கூடாது. வீட்டுக்கு முன் மாவிலைகளை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும்.

💐 இயற்கையான மாவிளைகளைக் கொண்டுதான் நீங்கள் மாவிலை தோரணத்தை அமைக்க வேண்டும்.

💐 பூஜைக்கு பயன்படுத்தும் பாக்கு வெற்றிலை பழங்களை நீங்கள் வெறும் தரையில் வைக்க கூடாது.ஏதேனும் ஒரு தட்டில் வைத்து தான் வைக்க வேண்டும்.

💐 வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும் என்பது முன்னோர்களின் வாக்கு ஏனென்றால் இந்த சங்கில் லட்சுமி வாசம் புரிவதாக கூறுகிறார்கள்.

💐 செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் வெண்ணையை உருக்கக் கூடாது.பெரியவர்களும் சிறியவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டு தினமும் படிப்பதால் மனித உடலில் இருக்கும் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

💐 வெற்றிலை நுனியில் மகாலட்சுமியும் மத்திகள் சரஸ்வதியும் காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம் எனவே வெற்றிலை காம்பை கிள்ளி விட்டு தான் வெற்றிலையை பூஜை அறையில் வைக்க வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …