” சட்டை காலரில் விடாப்பிடியான அழுக்கு..!” – ஈசியாய் சரி செய்ய இந்த டிப்சை யூஸ் பண்ணுங்க..!!

வாஷிங் மெஷினில் எண்ணற்ற வசதிகளை அள்ளித் தந்திருந்தாலும் போடும் சட்டை காலரில் இருக்கக்கூடிய அந்த அழுக்கு கலைவதில் அது சற்று தடுமாறி வருகிறதே என்று தான் இல்லத்தரசிகள் அனைவருமே சொல்லுவார்கள்.

 அதுமட்டுமல்லாமல் அதிக கரையோடு, அழுக்கோடு இருக்கின்ற துணிகளை சலவை செய்வதில் வாஷிங் மெஷினை பின்னுக்குத் தள்ளி எப்போதும் முன்னணியில் இருப்பவர்கள் கையால் துணி துவைப்பவர்கள் மட்டும் தான்.

வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் துணிகள் கடுமையான அழுக்கோடு இருக்கும். இந்த கடுமையான அழுக்கையும் சட்டை காலரில் இருக்கும் அழுக்கையும் மிக எளிதில் நீக்கக்கூடிய அருமையான ட்ரிக்கை இப்போது நான் கூறப்போகிறேன்.

 இதை நீங்கள் ஃபாலோ செய்து பாருங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும். உங்கள் வெள்ளைத் துளிகளும் பளிச்சென்று ஆவதோடு சட்டை காலரில் துளி கூட அழுக்கு இல்லாமல் புது சட்டை போல ஜொலிக்கும்.

 சட்டை காலரில் அழுக்கு போக சட்டை காலரில் இருக்கக்கூடிய அழுக்குப் போக வேண்டும் என்றால் நீங்கள் அந்த சட்டையை அப்படியே வாஷிங்மெஷினில் போடுவதை தவிர்த்து விடுங்கள்.

 அதற்கு முன் நீங்கள் அந்த சட்டையை சோப்பு பொடியை போட்டு தண்ணீரை ஊற்றி அதை நன்கு கலக்கி விடுங்கள். இப்போது இந்த டிடர்ஜென்ட் கலவையோடு நீங்கள் எப்போதும் பல் தேய்க்க பயன்படுத்தக்கூடிய பேஸ்ட் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு குறிப்பிட்ட அளவு பேஸ்ட்டை இந்த டிடர்ஜென்ட் கடவையில் நன்கு போட்டு கலக்கி விடவும்.

 இப்போது எந்த கலவையில் அழுக்காக இருக்கக்கூடிய குழந்தைகளின் சட்டைகளையும் காலர்களில் அழுக்கு நிறைந்த சட்டைகளையும் நீங்கள் அப்படியே முக்கி வைத்து விடலாம்.

இது குறைந்தபட்சம் அரை மணி நேரத்திலிருந்து முக்கால் மணி நேரம் வரை இந்த துணிகள் ஊர வைத்த பின் இதனை எடுத்து  உங்கள் கைகளால் லேசாக கசக்கினாலே விடாப்பிடியான அந்த அழுக்குகள் அனைத்தும் அந்த நீரில் கரைந்து வெளியே வந்து விடும்.

இதனை அடுத்து நீங்கள் எந்த துணிகளை லேசாக அலசி வாஷிங் மிஷினில் எப்போதும் போல் போட்டு துவைத்து விடுங்கள். இப்போது சட்டை காலரையும் குழந்தைகளின் அழுக்கு சட்டைகளையும் பாருங்கள் உங்களுக்கே மேஜிக் எப்படி என்று ஆச்சரியப்பட கூடிய அளவுக்கு அழுக்கு இல்லாமல் காட்சி அளிக்கும்.

இந்த துணிகளை நீங்கள் உலர்ந்த வெயிலில் உலர்த்தி எடுத்தால் கட்டாயம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். நீங்களும் இந்த ட்ரிக்கை உங்கள் வீட்டில் பாலோ செய்து பாருங்களேன்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …