” வேஸ்ட்டா எறியிற பொருட்களை கருவேப்பிலை செடி-யில் போடுங்க..! சூப்பரா துளிர் விட்டு மட மடவென வளரும்..!

குளிர்காலம் என்றாலே கருவேப்பிலைக்கு தட்டுப்பாடு அதிகளவு இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கருவேப்பிலை    செடி  வளர்ச்சிக்காக அதிக அளவு செயற்கை உரங்களை போட்டு வளர்த்து விடுவார்கள்.

 இதனால் அதிக அளவு கெமிக்கலால் வளர்க்கப்பட்ட அந்த கருவேப்பிலையை நாம் உணவில் எடுத்துக் கொள்வதின் மூலம் நமக்கு பல விதமான ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுவது பலருக்கும் தெரியாது.

 இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே அனைவரும் தங்கள் வீட்டில் ஒரு குட்டி தோட்டத்தையோ அல்லது மாடி தோட்டத்தையோ ஏற்படுத்தி பலனடைந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டாயம் கருவேப்பிலையை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்திருப்பார்கள்.

 இந்த கருவேப்பிலை செடியை நட்டு பல நாட்கள் ஆகியும் அது அப்படியே வளராமல் சற்று கூட துளிர் விடாத நிலையில் இருப்பதால் கவலையும் அவர்களுக்குள் இருக்கும்.

 இனி அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் உங்கள் சமையல் அறையில் நீங்கள் வேஸ்டாக கருதக்கூடிய பொருட்களை அந்த கருவேப்பிலை செடியில் விடுவதின் மூலம் படவென்று கருவேப்பிலை செடி வளர்ந்து உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்

அது மட்டுமல்லாமல் மனமனக்க இயற்கையான முறையில் எந்த ஒரு கெமிக்கலும் இல்லாத கருவேப்பிலையை உங்கள் சமையல் அறைகளில் பயன்படுத்தி பக்கத்து வீட்டுக்கு வாசம் செல்லுமாறு உங்கள் சமையலை அசத்தலாக செய்து முடிக்கலாம்.

 அட அப்படி அது என்ன பொருட்கள் என்று யோசிப்பது எங்களுக்கு தெரிந்து விட்டது.அது நீங்கள் அன்றாடம் அரிசி கழியக்கூடிய கழிநீரை அப்படியே கொட்டி விடாமல் ஒரு பாலுதின் பையிலோ அல்லது டெஸ்ட்பின்னிலோ சேமித்து வையுங்கள்.

 இரண்டு மூன்று நாட்கள் கழித்து இந்த கலவையானது புளித்துப் போகும் இந்த புளித்த அரிசி கழிநீரை நீங்கள் உங்கள் கருவேப்பிலை செடியில் ஊற்றி வாருங்கள். கட்டாயமாக மிக எளிதில் அது வளர்வதை நீங்கள் காணலாம்.

 அது மட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய தயிரோ, மோரோ புளித்து விட்டால் அதை வெளியே கொட்ட வேண்டிய அவசியமே இல்லை. கருவேப்பிலை செடியில் இந்த புளித்த மோரை ஊற்றுவதன் மூலம் அதன் வளர்ச்சி பல மடங்காக பெருக்கும்.

 இந்த இரண்டு பொருட்களையும் நீங்கள் தொடர்ந்து உங்கள் செடிக்கு கொடுக்கும்போது செடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு எந்தவிதமான நோய் தாக்குதல்களும் ஏற்படாமல் இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version